கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் ‘சியான் 60’ (Chiyaan 60). இந்த படத்தில் நடிகர் விக்ரம் (Vikram) அவரது மகன் துருவ் விக்ரமும் (Dhruv Vikram) முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் லலித்குமார் தயாரிக்கிறார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் (Santhosh Narayanan) இசையமைக்கிறார். இந்த படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கொரோனா ஊரடங்கு (Corona Lockdown) காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


ALSO READ | தனுஷின் கர்ணன்: Behind The Scenes எடுக்கப்பட்ட வீடியோ!


இப்படம் குறித்த முக்கிய அப்டேட்டை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். இதுவரை ‘சியான் 60’ படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும், கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் எஞ்சியுள்ள படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் கோப்ரா வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் துருவ நட்சத்திரமும் இந்த வருடம் திரைக்குவர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


ALSO READ | 17 மொழிகளில் அதிரடியாக வெளியாகும் தனுஷின் ஜகமே தந்திரம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR