17 மொழிகளில் அதிரடியாக வெளியாகும் தனுஷின் ஜகமே தந்திரம்!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் நெட்பிளிக்ஸில் OTT தளத்தில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாக உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 4, 2021, 03:25 PM IST
17 மொழிகளில் அதிரடியாக வெளியாகும் தனுஷின் ஜகமே தந்திரம்! title=

Dhanush starrer Jagame Thandhiram: தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj) இயக்கியுள்ள படம் ஜகமே தந்திரம். இந்த திரைப்படம் 2020, மே மாதத்தில் வெளியாகவிருந்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக அது தள்ளிப் போனது. 

தனுஷ் (Dhanush) ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லஷ்மி நடித்துள்ளார். தற்போது ஜகமே தந்திரம் (Jagame Thandhiram) படம் நெட்பிளிக்ஸில் OTT  தளத்தில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாக உள்ளது. 

ALSO READ | மிரட்டும் Jagame Thandhiram டீஸர்! இந்த OTT இல் ரிலீஸ் ஆகும் ஜகமே தந்திரம்!

இதற்கிடையில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அனைவரின் பாராட்டுக்களை பெற்றது.

இந்நிலையில் இந்தியாவின் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு மற்றும் திரையரங்குகள் மூட வேண்டும் என கட்டுப்பாடுகள் மத்திய மாநில அரசுகள் பிறப்பித்து வருகின்றன. அதனால் ஜகமே தந்திரம் திரைப்படம் ஜூன் 18 நெட்பிளிக்ஸ் (Netflix) OTT தளத்தில் வெளியாகும். தமிழில் உருவாகி உள்ள ஜகமே தந்திரம் படத்தை தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்பட 17 மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஓடிடியில் வெளியாகும் தமிழ் படம் ஒன்று 17 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News