Cinema Headlines: சுட சுட சினிமா தலைப்பு செய்திகள்..! திரையுலகில் இன்று நடந்தவை என்னென்ன?
Cinema Headlines: இன்றைய சினிமா நிகழ்வுகளை இங்கே உள்ள தலைப்பு செய்திகள் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
திரைத்துறையில் இன்று பல முக்கியமான நிகழ்வுகள் நடைப்பெற்றன. அவை என்னென்ன என்பதை இன்று தொகுப்பாக பார்க்கலாம்.
ப்ராஜெக்ட் கே-வில் கமல் ஹாசன்..
ரசிகர்களால் ‘உலக நாயகன்’ என அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன். இவர், மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் கே படத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் கமல் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவருடன் இணைந்து இந்த படத்தில் தீபிகா படுகோன், திஷா பதானி என இரண்டு கதாநாயகர்கள் உள்ளனர். அமிதாப் பச்சன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்
‘லியோ’ பாணியில் சூர்யாவின் ‘கங்குவா’ படப்பிடிப்பு
விஜய் நடித்துள்ள லியோ படத்தின் நா ரெடி பாடல் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தது. இதில் 1,500 நடனகலைஞர்கள் பணியாற்றி இருந்தனர். இதே போல சூர்யா நடித்து வரும் கங்குவா படத்திலும் ஒரு பாடல் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், லியோ பட பாணியில் கங்குவா படமும் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | மருத்துவமனையில் நடிகை குஷ்பூ
லோகேஷ் கனகராஜின் அடுத்த ஹீரோ..!
லியோ படத்தை அடுத்து லோகேஷ் கைதி2 படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் இயக்கும் இன்னொரு படம் குறித்த தகவலும் வெளியானது. மாபெரும் பட்ஜெட்டில் உருவாக இருக்கும் அந்த படத்தில் தென்னிந்திய திரையுலகின் பெரிய ஹீரோவை நடிக்க வைக்க இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. அது வேறு யாரும் இல்லை, ஆதிபுருஷ் படத்தில் நடித்த பிரபாஸ்தான். இந்த படத்தின் ஆரம்பக்கட்ட படப்பிடிப்புகள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பணிகள் எப்போது ஆரம்பிக்கும் எனும் தகவல் இன்னும் வெளியாகவில்லை.
ரிலீஸுக்கு ரெடியான மாமன்னன்…
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அரசியல் கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகி வரும் படம் 'மாமன்னன்'. ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். 'மாமன்னன்' திரைப்படம் இந்த மாதம் 29 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆதிபுருஷ் படத்தை பங்கமாக கலாய்த்த கிரிக்கெட் வீரர்..
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரராக ஜொலித்தவர் வீரேந்திர சேவாக். இவர், அவ்வப்போது அரசியல் சார்ந்த அல்லது படங்கள் சார்ந்த கருத்துகளை கூறுவது வழக்கம். அப்படித்தான் தற்போதும் ஆதிபுருஷ் படம் குறித்து செம கலாயான ட்வீட் ஒன்றை சேவாக் பதிவிட்டுள்ளார். சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “ஆதிபுருஷ் படத்தை பார்த்த பிறகுதான், பாகுபலி படத்தில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என புரிகிறது” என குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இந்த ட்வீட்டை ரீ-ஷேர் செய்து வருகின்றனர்.
குழந்தை கெட்-அப்பில் ரோபோ சங்கர்..
சிரிப்பான பேச்சுக்கும் நகைச்சுவையான செயல்பாடுகளுக்கும் பெயர் போனவர் ரோபாே சங்கர். தனது குடும்பத்துடன் சேர்ந்து இவர் அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது வீடியோவாக எடுத்து இன்ஸ்டா பக்கத்தில் இவர்கள் வெளியிடுவது வழக்கமம். அப்படி ஒரு வீடியோவை அவர் தற்போது வெளியிட்டுள்ளார். ரோபாே சங்கர் அரை டவுசரும் டி-சர்டும் போட்டவாறும் தலையில் ஒரு குடிமி போட்டுக்கொண்டும் பக்கா குழந்தை போஸில் நடனமாடுகிறார். பின்னர், இவருடன் நடனத்தில் இணையும் இவரது குடும்பத்தினர், “காஞ்சிபுரம் போவோம்..காமாட்சிய பாப்பாேம்..” என்ற பாடலுக்கு நடனமாடுகின்றனர். சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. சில திரை பிரபலங்கள் கூட இந்த வீடியோவில் கமெண்ட் செய்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ