நடிகரும் பாஜகவைச் சேர்ந்தவருமான ராதாரவி பழனி முருகன் கோயிலில்  சாமி தரிசனம் செய்தார். பின்னர் மாலையில் நடந்த தங்கரத புறப்பாட்டில் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டார். முன்னதாக அடிவாரத்தில் இருந்து மின்இழுவை ரயில் மூலம் மலைக்கோயிலுக்கு சென்று தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் மின்இழுவை ரயிலில் அடிவாரம் வந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே ஆன்மிக பூமிதான். சினிமாவில் ஒருசிலரின் ஆதிக்கம் எப்போதும் உள்ளது. தெலுங்கு சினிமாவில் சிண்டிகேட் மூலம்தான் படம் எடுத்து வெளியிடுகிறார்கள். பெரிய பட்ஜெட் படம் வரும்போது சிறிய படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை. ஓடிடி தளம் இருப்பதால்தான் சிறிய பட்ஜெட் படங்கள் தப்பிக்கின்றன. வரும் காலங்களில் ஓடிடி தளத்தால் பெரிய ஹீரோக்களுக்கான மாஸ் குறைய வாய்ப்பு உள்ளது. 


அதாவது ஹீரோக்களுக்கான பாலாபிஷேகம், திரும்ப திரும்ப பார்க்கும் வழக்கம் ஆகியவை குறைய வாய்ப்பு உள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிறந்த அரசியல் தலைவராக உள்ளார். 


மேலும் படிக்க | ’ஐயா என ஏன் அழைத்தேன்?’ விஜய் ரசிகர்களுக்கு கமல் கொடுத்துள்ள விளக்கம்


பத்திரிகையாளர்களை திறம்பட கையாள்வதால்தான் தொடக்க காலத்தில் அவருக்கு எதிரான கருத்துடையவர்கள் தற்போது நடுநிலைக்கு வர தொடங்கியுள்ளனர். நடிகர் பயில்வான் ரங்கநாதன் யாரை விமர்சனம் செய்கிறாரோ, சம்பந்தப்பட்டவர்கள் வழக்கு தொடரலாமே. எல்லாமே வியாபாரம்தான் என்று அவர்தான் சொல்லியிருக்கிறாரே” என்றார்.



முன்னதாக தமிழில் வெளியான பீஸ்ட், டான், விக்ரம் உள்ளிட்ட பல படங்களை உதயநிதியின் ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுவருகிறது. ஆனால் உதயநிதி எம்.எல்.ஏ ஆன பிறகு அனைவரையும் மிரட்டி படத்தை வாங்கி வெளியிடுகிறார் என எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.


மேலும் படிக்க | திருமணம் முடிந்த கையோடு நயன் - விக்னேஷ் சிவன் அடித்த விசிட்


அதேசமயம், தான் யாரையும் மிரட்டவில்லை என விக்ரம் பட இசை வெளியீட்டு விழாவி உதயநிதி விளக்கம் கொடுத்திருந்தார். தற்போது சினிமாவில் ஒருசிலரின் ஆதிக்கம் இருப்பதாக ராதாரவியும் கூறியிருப்பதால் அவரும் உதயநிதியைத்தான் மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கின்றனர் என பாஜகவினர் கூறிவருகின்றனர்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR