’ஐயா என ஏன் அழைத்தேன்?’ விஜய் ரசிகர்களுக்கு கமல் கொடுத்துள்ள விளக்கம்

நடிகர் விஜயை ஐயா என ஏன் அழைத்தேன் என நடிகர் கமல்ஹாசன் விளக்கம் கொடுத்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 10, 2022, 12:35 PM IST
  • விஜயுடன் ஒன்றாக நடிப்பது எப்போது?
  • நடிகர் கமல்ஹாசன் விளக்கம்
  • விஜய் ரசிகர்களுக்கும் பதில் கொடுத்த கமல்
’ஐயா என ஏன் அழைத்தேன்?’ விஜய் ரசிகர்களுக்கு கமல் கொடுத்துள்ள விளக்கம் title=

கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் சூர்யா மற்றும் விஜய் சேதுபதி, பகத்பாசில் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களும் நடித்தனர். பல நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து நடித்த இந்தப் படம் வெற்றியை பெற்றதை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது, சூர்யாவுடன் இணைந்து நடித்த கமல்ஹாசன், விஜயுடன் எப்போது சேர்ந்து நடிப்பார்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும் படிக்க | அரசியலிலிருந்து விலகும் கமல்ஹாசன்? - Press Meet-இல் சொன்னது என்ன?!

அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், அவருடன் சேர்ந்து நடிப்பதற்கு ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவித்தார். அவர் தேதிகளை ஒதுக்கும்பட்சத்தில் அவருடன் இணைந்து நடிக்கத் தயார் எனக் கூறிய கமல்ஹாசன், அதற்கான கதைக்களம், பெரிய தயாரிப்புக்கான நேரம் விஜய்க்கு இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இவையெல்லாம் சரியாக ஒத்துவந்தால் இணைந்து நடிப்போம் என்றும் கமல்ஹாசன் கூறினார். 

தொடர்ந்து கேள்விகளுக்கு பதில் அளித்த கமல்ஹாசன், செய்தியாளர் சந்திப்பின்போது விஜயை ஐயா என அழைத்தற்காக விமர்சனங்கள் எழுந்ததை குறிப்பிட்டார். அவர் மீது இருக்கும் அன்பினால் தான் ஐயா என அழைத்தாகவும், சிவாஜி கணேசன் தன்னை கமல் ஐயா என்று தான் அழைப்பார் என்றும் விளக்கம் அளித்தார்.  

மேலும் படிக்க | நயன்தாரா - விக்னேஷ் சிவன் வயது வித்தியாசம் எவ்வளவு? அதிகம் தேடிய நெட்டிசன்கள்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு விக்ரம் புரோமோஷன் நிகழ்ச்சியில் கமல்ஹாசனிடம், சூர்யாவை வைத்து படம் எடுத்துவிட்டீர்கள், விக்ரம் 3 படத்தில் விஜய் இருக்க வாய்ப்புள்ளதா? என கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு அவர் பதில் அளிக்கும்போது ‘ விஜய் அய்யா சம்மதித்தால் நான் செய்வேன்’ என்று பதிலளித்திருந்தார். அது அப்போது விமர்சிக்கப்பட்ட நிலையில், அதற்கான விளக்கத்தை கமல் கொடுத்தார். இளைய தளபதி விஜய், தற்போது வம்சி பைடிபல்லி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக மீண்டும் லோகேஷ் கனகராஜூடன் இணைய இருக்கிறார். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News