‘நானே வருவேன்’ - ஷாக் கொடுத்த முதலமைச்சர்... சிலாகிக்கும் செல்வராகவன்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செல்வராகவன் குடும்பத்தினரை சந்தித்த புகைப்படம் வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, இரண்டாம் உலகம், ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன என இவர் இயக்கிய அனைத்து படங்களும் வேறு பாதையில் பயணிப்பவை. மனிதர்களின் ஆழமான உணர்வை அப்பட்டமாக பேசக்கூடிய செல்வராகவனுக்கு பலர் ரசிகர்களாக இருக்கின்றனர்.
இவர் கடைசியாக இயக்கிய என்.ஜி.கே, நெஞ்சம் மறப்பதில்லை படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றன. இந்தச் சூழலில் நடிப்பிலும் கவனம் செலுத்தும் செல்வராகவன் பீஸ்ட், பகாசூரன், சாணிக்காயிதம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் பல படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வராகவன் நடிப்பில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்திருந்தாலும் தன் இயக்கத்தையும் விடவில்லை. அவர் தற்போது தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கியுள்ளார். இதில் செல்வராகவனும் நடித்திருக்கிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரித்து யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படம் செப்டம்பர் 29ஆம் தேதி ரிலீஸாகிறது. இதனையொட்டி ப்ரோமோஷன் பணிகளும் சூடுபிடித்துள்ளன.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செல்வராகவனையும், அவரது குடும்பத்தினரையும் சந்தித்திருக்கிறார். இதுகுறித்து செல்வராகவன் தன் ட்விட்டர் பக்கத்தில், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எங்கள் குடும்பத்தை சந்தித்தபோது. என்ன ஒரு சிறப்பான சந்திப்பு” என பதிவிட்டு புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ