பூஜை அறையில் ஃபோட்டோ... வெந்து தணிந்தது காடு ஐசரிக்கு வணக்கத்த போடு - கூல் சுரேஷூக்கு செல்ஃபோன் கிஃப்ட்

வெந்து தணிந்தது காடு படத்திற்கு விடாது ப்ரோமோஷன் செய்த கூல் சுரேஷுக்கு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஐஃபோன் பரிசளித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 27, 2022, 02:29 PM IST
  • வெந்து தணிந்தது காடு படம் வெற்றி பெற்றுள்ளது
  • சிம்புவுக்கும், கௌதமுக்கும் பரிசளித்தார் தயாரிப்பாளர்
  • தற்போது கூல் சுரேஷுக்கும் பரிசளித்திருக்கிறார்
 பூஜை அறையில் ஃபோட்டோ... வெந்து தணிந்தது காடு ஐசரிக்கு வணக்கத்த போடு - கூல் சுரேஷூக்கு செல்ஃபோன்  கிஃப்ட் title=

சினிமாவில் பல பிரச்னைகளை சந்தித்த சிம்பு தற்போது செகண்ட் இன்னிங்ஸில் கலக்கிவருகிறார். சிம்புவின் மீட்சியை அவரது ரசிகர்கள் பலமாக கொண்டாடிவருகின்றனர். அப்படிப்பட்டவர்களில் கூல் சுரேஷ் ஒருவர். சிம்புவின் எந்தப் படம் வெளியானாலும் ப்ரோமோஷன் செய்த அவர் ஒருகட்டத்தில் யார் பாடம் வந்தாலும், “வெந்து தணிந்தது காடு சிம்புவுக்கு வணக்கத்தை போடு” என்றே தனது பேச்சை தொடங்கினார் அவரது இந்தப் பேச்சு ஆரம்பத்தில் கேலி செய்யப்பட்டாலும் காலப்போக்கில் ரசிக்கப்பட்டது.

அதேசமயம் அவரது இந்தப் பேச்சு விமர்சனத்தையும், கண்டனத்தையும்கூட சம்பாதித்தது. ஆனாலும் சிம்புவுக்கு இப்படி ஒரு ரசிகரா என பலரும் புருவம் உயர்த்தினர். இந்தச் சூழலில் வெந்து தணிந்தது காடு படம் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் சிம்புவுக்கு தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றி கிடைத்துள்ளது. வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சிம்புவுக்கு காரும், கௌதம் வாசுதேவுக்கு பைக்கும் பரிசாக அளித்தார். இந்நிலையில் படத்துக்கு தீவிர ப்ரோமோஷன் செய்த கூல் சுரேஷுக்கு ஐஃபோனை பரிசாக கொடுத்துள்ளார். இதனை பெற்றுக்கொண்ட கூல் சுரேஷ் தன் வீட்டு பூஜை அறையில் ஐசரி கணேஷின் ஃபோட்டோவை வைத்து அதன் அருகில் இவர் நிற்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். தற்போது இந்தப் புகைப்படம் வைரலாகியுள்ளது.

Cool Suresh

மேலும், தொண்டை நீர் வற்ற வெந்து தணிந்தது காடு படத்துக்கு ப்ரோமோஷன் செய்தது கூல் சுரேஷுக்கு வீண் போகவில்லை எனவும் நெட்டிசன்ஸ் கமெண்ட் செய்துவருகின்றனர்.

மேலும் படிக்க | ஆசிரியர் மற்றும் மாணவர்களுடன் அரபிகுத்து பாடலுக்கு நடனமாடிய கத்ரீனா கைஃப் -வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News