விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம்: வழிகாட்டியாய் வெளியான ‘பிரஹ்லாத்’ குறும்படம்!!

Prahlad: பிரஹ்லாத் குறும்படம் உணர்ச்சிகள் மீதான சிக்கல்கள் மற்றும் தைரியம் குறித்து பேசுகிறது. படத்தின் கதை 1945 இல் நடந்ததாக காட்டப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 27, 2022, 12:21 PM IST
  • ஸ்ரீ பிரல்ஹாத் பி. சாப்ரியாவின் வாழ்க்கையை திரைக்கு கொண்டுவந்த ‘பிரஹ்லாத்’ திரைப்படம்.
  • பல உயரிய கருத்துகளை எடுத்துரைக்கிறது இந்த குறும்படம்.
  • படம் வெளியான மறுநாள் “செலிபிரேட்டிங் பிரல்ஹாத்” என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டிங்கில் இருந்தது.
விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம்: வழிகாட்டியாய் வெளியான ‘பிரஹ்லாத்’ குறும்படம்!! title=

விடாமுயற்சியும் , கடின உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்திய பிரல்ஹாத்தின் குறும்படம் - ஃபினோலெக்ஸ் தயாரித்த குறும்படம் இணையத்தில் வைரல்!!

பிரல்ஹாத் குறும்படமானது பிரல்ஹாத் 14 வயதிலேயே, எப்படி வாழ்க்கை பயணத்தை மாற்றி தனக்கென வளத்தை உருவாக்கி கொண்டார் என்பதை விரிவாக விவரிக்கிறது. அச்சிறுவன்  கருணையுடனும், பக்தியுடனும், குறிக்கோளுடனும் பணிபுரிந்து வாழ்க்கையில் வெற்றி பெற்ற தொழிலதிபர்  மறைந்த ஸ்ரீ பிரல்ஹாத் பி. சாப்ரியா ஆவார். இவர் இந்தியாவின் மிகவும் நம்பகமான நிறுவனர் . இவர் நிறுவிய ஃபினோலெக்ஸ் நிறுவனத்தின்  PVC பைப்ஸ் மிகவும் நம்பகத்தன்மை கொண்டதாகும். 

இவர் தொடர்பாக செப்டம்பர் 1 ஆம் தேதி யூடியூப்பில் ஷ்பாங் மோஷன் பிக்சர்ஸ் ஃபினோலெக்ஸின் துணையுடன்  சேர்ந்து ஒரு குறும்படத்தை தயாரித்து வெளியிட்டது. இப்படம் வரவிருக்கும் தலைமுறையினர்,  இந்திய சந்தைப்படுத்தல் தொழில்களில் வளர்ச்சியடைவதை நோக்கமாகக் கொண்ட தொழில்முனைவோரை ஊக்குவிக்கிறது. குறும்படமானது பிரல்ஹாத்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உள்ளது. 

மேலும் படிக்க | உலகநாயகனை சந்தித்த பிரிட்டன் எம்.பி - எதற்கு தெரியுமா? 

இந்த குறும்படம் உணர்ச்சிகள் மீதான சிக்கல்கள் மற்றும் தைரியம் குறித்து பேசுகிறது. படத்தின் கதை 1945 இல் நடந்ததாக காட்டப்படுகிறது. அமிர்தசரஸைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பிரல்ஹாத்தை மையமாக கொண்டு கதை நகர்கிறது. அச்சிறுவன் மீது தந்தையின் இறப்புக்கு பின் குடும்ப பாரம் முழுவதும் அவனது தோள்களில் விழுகிறது. அங்கிருந்து சிறுவனின் பயணம் மாறுகிறது. 10 ரூபாயை 10 ஆயிரம் கோடியாக மாற்றிய பிரல்ஹாத்தின் திறனை இப்படம் வரையறுக்கிறது. மேலும் இப்படம் ஒரு சக்திவாய்ந்த செய்தியை கூறுகிறது. பிரல்ஹாத் உருவாக்கிய குறிப்பிட்ட வரலாற்றை எடுத்துரைக்கிறது. ஒரு பெரிய நிறுவனத்தைத் தொடங்கிய வெற்றிகரமான மனிதனின் மதிப்பான செயல்பாடுகளை முன் வைக்கிறது. இந்தக் கதை ஒரு எளிய மனிதனின் அறிவுத்திறன் மற்றும் போராட்டங்களை விவரிக்கிறது

பிரல்ஹாத் குறும்படத்திற்கு உலகளவில் நல்ல வரவேற்பும் சர்வதேச பட விழாக்களில் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. படம் வெளியான மறுநாள் “செலிபிரேட்டிங் பிரல்ஹாத்” என்ற ஹேஷ்டேக்   ட்விட்டரில் டிரெண்டிங்கில் இருந்தது. இப்படம் திரையிடப்பட்ட பிறகு சினிமா உலகம் முழுவதையும் புரட்டிப் போட்டது. சமூக ஊடகங்களான யூடியூப் மற்றும் ட்விட்டரில் பல வரவேற்கத்தக்க விமர்சனங்களைப் பெற்றது.     
 
இதுகுறித்து தயாரிப்பாளர் ஹர்ஷில் கரியா கூறுகையில், “நாங்கள் தொடர்ந்து சொல்ல வேண்டிய சக்திவாய்ந்த கதைகளைத் தேடுகிறோம். அதாவது நாங்கள் எப்படி வேலை செய்கிறோம் என்பதை பற்றியும் , மிகுந்த மனித நேயம் கொண்டுள்ளோம் என்பதை விவரிக்கும் விதமாகவும் இருக்க விரும்புகிறோம். ஷ்பாங் மோஷன் பிக்சர்ஸ், ஃபினோலெக்ஸ் குழுமத்தின் நிறுவனர் ஸ்ரீ பிரல்ஹாத் பி சாப்ரியாவின் வாழ்க்கையில் உத்வேகத்தைக் கண்டது. அவரது வாழ்க்கை ஒரு திரைப்படத்திற்கு உத்தரவாதம் அளித்தாலும், இந்த ஒரு சம்பவத்தை 'பிரல்ஹாத் குறும்படமாக உலகத்துடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவரது நிறுவனம் இந்திய தொழில்முனைவோருக்கு ஊக்கமளிக்கிறது மற்றும் படிக்கத் தகுந்தது.
 
இத்திரைப்படத்தை தயாரிக்கும் ஃபினோலக்ஸ் குழுமம் நாட்டின் மிகப்பெரிய பிளம்பிங் உற்பத்தியாளராகவும், சுகாதார பொருட்கள் உற்பத்தியாளராகவும் உள்ளது. இந்நிறுவனம் பல துறைகளில் தனது கிளைகளைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக - மின் மற்றும் தொலைத்தொடர்பு பொருட்கள், கேபிள்கள் மற்றும் பாலிவினைல் குளோரைடு தாள்கள் உட்புறங்கள் என பல உள்ளன. நிறுவனம் இன்னும் அதன் செறிவூட்டலைத் தொடர்கிறது. முதலீடுகள் மூலம் தொழில்நுட்ப வலிமையை அதிகரிக்க மதிப்பு சங்கிலி உள்ளது. இதன் தரம், மூலப்பொருட்கள் மூலம் உற்பத்தி சேமிப்பு, போக்குவரத்து, விற்பனை மற்றும் பிசின் உற்பத்தி விநியோகம், என நிறுவனம் அனைத்து துறைகளிலும் மகத்தான தேர்ச்சி பெற்றுள்ளது. ஒரு வெற்றிகரமான தொழிலதிபரின் மனநிலையும் சிந்தனை செயல்முறையும் ‘பிரல்ஹாத்’ கதையில் எதிரொலிப்பதை நம்மால் காணமுடிகிறது என்றால் அது மிகையல்ல..
 
இந்த ஒப்பில்லாத திரைப்படத்தைக் காண, https://www.youtube.com/watch?v=OBed_pQs9to&t=2s என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

மேலும் படிக்க | விஜய்யை வைத்து படம் எடுக்காததற்கு இதுதான் காரணம் - கார்த்திக் சுப்புராஜ்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News