வெங்கட் பிரபு இயக்கத்தில், அசோக் செல்வன், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள மன்மதலீலை படத்தின் ட்ரெய்லர் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மாட்டிக் கொள்ளாதவரை எல்லா ஆண்களும் ராமர்களே என்ற வாசகம் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளதுதான் சர்ச்சைக்குக் காரணம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவீன இளைஞனின் வாழ்வில் நடக்கும் லீலைகளைச் சொல்லும் மன்மதலீலை படம் ஏப்ரல் 1-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். ட்ரெய்லர் வெளியானதும் இது ஆபாசமான படம், சர்ச்சைக்குரிய படம் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. 


தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா, ''நிச்சயமாக இது ஆபாசமான படமல்ல. குழந்தைகளுடன் குடும்பங்களுடன் பார்க்கத் தகுதியுள்ள படம்'' என்று கூறியுள்ளார். நாயகன் அசோக் செல்வன், ''இந்தப் படத்தில் எந்த கெட்ட விசயமும் இல்லை'' என்று சத்தியம் செய்யாத குறையாகக் கூறியுள்ளார். 


இயக்குநர் வெங்கட் பிரபு, ''இப்படம் கில்மா படம் கிடையாது. எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். நான் அப்படி படம் எடுக்க மாட்டேன். இந்தப் படம் கண்டிப்பாக அனைவரும் இணைந்து ரசிக்கும் படியான படமாக இருக்கும்'' என்று தெரிவித்தார். 


ஆனாலும், சர்ச்சை முடிந்தபாடில்லை. இணையத்தில் நெட்டிசன்கள் இயக்குநர் வெங்கட் பிரபுவை வறுத்தெடுத்து வருகிறார்கள். ''மாட்டிக் கொள்ளாதவரை எல்லா ஆண்களும் ராமர்களே என்ற வாசகம்... இப்படிக்கு மாட்டிக் கொண்டவர் என்று வெங்கட் பிரபு ட்ரெய்லரில் வாசகத்தை இடம்பெறச் செய்துள்ளார். 


மேலும் படிக்க |  ஆந்திராவையும் மிரட்டும் ‘பீஸ்ட்’: வேற லெவல் பிசினஸ்!



ஒட்டுமொத்த ஆண் சமூகத்தையும் கெட்டவர்கள் என்று தீர்மானித்து விட்டாரா இயக்குநர்?'' என்று தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். ஆண்களை அவமானப்படுத்திய வெங்கட் பிரபு என்றும் சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  


அஜித், சூர்யா, சிம்பு என்று படம் இயக்கிய வெங்கட் பிரபு ஏன் இந்த அளவுக்குக் கீழே இறங்கி வந்தார் என்றும் சிலர் கவலைகளைப் பகிர்ந்துள்ளனர். இதனிடையே இயக்குநர், நடிகர் எஸ்.ஜே.சூர்யா படத்தின் ட்ரெய்லரைக் குறிப்பிட்டு, சார் இது வெங்கட் பிரபுவின் சேட்டைகள் என்று குறிப்பிட்டுள்ளார். 



இதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, ஆனா, இந்த சேட்டைக்கான விதை நீங்க போட்டது எனக் குறிப்பிட்டு,லவ் யூ சார் எனப் பகிர்ந்துள்ளார்.



இதன் மூலம் நியூ, அன்பே ஆரூயிரே பாணியில் இந்த மன்மதலீலை படம் இருக்கும் எனக் கணிக்க முடிகிறது. படம் வெளிவந்த பிறகே இது எந்த மாதிரியான படம் என முழுமையாகத் தெரியும். 


மேலும் படிக்க | வலிமை ஓடிடி வெளியீட்டுக்கு தடை இல்லை: நிவாரணம் அளித்த சென்னை உயர் நீதிமன்றம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G