Cook With Comali: வந்தவுடன் எலிமினேட் ஆகும் ‘இந்த’ போட்டியாளர்..! வாழைப்பழ டாஸ்க்தான் காரணமா?
Cook With Comali Season 4: தனியார் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் தெரியுமா?
வார இறுதியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான ஒன்று, குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி, 4 ஆவது சீசனில் சில மாதங்களுக்கு முன்பு அடியெடுத்து வைத்து தற்போது பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. பல போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறைய ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர்.
தொடர்ந்து வெளியேற்றப்படும் போட்டியாளர்கள்
முதலில், நாய் சேகர் பட இயக்குநர் கிஷோர் குமார், பின்பு காளையன் அடுத்து ராஜ ஐயப்பன் இவரைத்தொடர்ந்து விஜே விஷால், கடைசியாக ஷெரின் என வரிசையாக போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில், இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
புதிய போட்டியாளர்கள்
பழம்பெரும் நடிகர் ராஜேஷின் பேரனும் ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் கடந்த இரண்டு வாரங்களாக குக் வித் கோமாளியில் போட்டியாராக பங்கேற்று வருகிறார். சில படங்களில் துணை நடிகராகவும், வில்லனாகவும் ஆர்ட் டைரக்டராகவும் பணிபுரிந்து வரும் கிரண், கஜேஷுடன் இணைந்து புது போட்டியாளராக வந்தார். கஜேஷ், சமையல் கலை கற்று வருவதாகவும் அவர் பிற போட்டியாளர்களுக்கு பயங்கரமாக ஈடு கொடுத்து சமையல் செய்வார் என்றும் அவர் பங்கேற்ற எபிசோடுகளில் நடுவர் வெங்கடேஷ் பட் கூறினார்.
மேலும் படிக்க | Kushi Movie: 23 ஆண்டுகளை கடந்தும் பசுமையான காதலாக மனதில் பதிந்த குஷி திரைப்படம்..!
கஜேஷ் வெளியேற்றம்?
பல்வேறு திடீர் திருப்பங்களுடன் நடைப்பெற்று வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி விரைவிலேயே இறுதி கட்டத்தை நெருங்க உள்ளது. இந்த வாரம், எலிமினேஷன் வாரம் என்பதால் போட்டியாளர்களில் யார் வெளியேறப்போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமுடன் உள்ளனர். இந்த வாரம் வைல்டு கார்டு மூலம் எண்ட்ரி கொடுத்த கஜேஷ் வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சொதப்பிய வாழைப்பழ சேலஞ்ச்?
வெளியேறவுள்ள நபர் குறித்த தகவல்கள் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த வாரம் வாழைப்பழத்தை வைத்து சமைக்க சொன்னதாகவும் அதில் கஜேஷ் சிறப்பாக போட்டியிடவில்லை என்றும் கூறப்படுகிறது. கஜேஷ் வெளியேறுகிறாரா இல்லையா என்பது நாளை மற்றும் அதற்கு மறுநாள் வரும் எபிசோடுகளில்தான் தெரியும்.
வலுவான போட்டியாளர்கள்..
நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் இந்த நிகழ்ச்சியில் தங்களை தக்கவைத்து கொள்வதற்காக ஒவ்வொரு போட்டியாளரும் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3 சீசன்களிலும் கோமாளியாக வந்து பலரையும் சிரிக்க வைத்த சிவாங்கி, இந்த சீசனில் குக்-ஆக வந்து பலரையும் சர்ப்ரைஸ் செய்தார். அதிலும் செஃப் ஆப் தி வீக், இம்யூனிட்டு பேண்ட் என பல போட்டிகளில் டாஸ்குகளில் வெற்றி பெற்று நடுவர்களை கவரவும் செய்தார். இவரைத்தவிர நடிகை விசித்ரா, நடிகை ஆண்ட்ரியன், வில்லன் நடிகர் மைம் கோபி என இவர்கள் அனைவரும் கடந்த வாரங்களில் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றனர். முதல் சில வாரங்களிலும் சொதப்பினாலும் அதன் பிறகு தனது பெரும் முயற்சி எடுத்து சிறப்பாக சமைக்க ஆரம்பித்துள்ளார், நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. எனவே, இனி வரும் வாரங்களில் பாேட்டிகள் அனைத்தும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | என்ட்ரி கொடுக்கும் புது கேரக்டர்..! தெய்வம் தந்த பூவே சீரியல் அப்டேட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ