Cooku With Comali 5 Review : தமிழ் தொலைக்காட்சிகளுள் மிகவும் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது தொடங்கியுள்ளதை அடுத்து, ரசிகர்கள் இது குறித்த விமர்சனங்களை ட்விட்டர் தளங்களில் பதிவிட்ட வண்ணம் இருக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குக் வித் கோமாளி சீசன் 5:


புதுமையான ரியாலிட்டி நிகழ்ச்சிகளை வழங்குவதில் தளபதி நடிகரின் பெயர் கொண்ட சேனலை யாராலும் அடித்துக்காெள்ள முடியாது. அந்த வகையில், முற்றிலும் புதிய பரிமாணத்தில் உருவாக்கப்பட்ட நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. சமையல் தெரிந்த ஒரு செலிப்ரிட்டியும், சமையல் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு காமெடி செலிப்ரிட்டியையும் வைத்து ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சிதான், குக் வித் கோமாளி. 


2019ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, தற்போது 5வது சீசனை எட்டியிருக்கிறது. இந்த சீசனில் புதிய நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் நியமிக்கப்பட்டார், இவருடன் பழைய நடுவர் செஃப் தாமுவும் சேர்ந்து போட்டியில் பங்கு பெறுகின்றனர். அது மட்டுமன்றி நாஞ்சில் விஜயன், ராமர், ஷப்னம் உள்ளிட்ட பலர் புதிய கோமாளிகளாக களமிறங்கியுள்ளனர். குக்குகளாக ஸ்ரீகாந்த் தேவா, விடிவி கணேஷ், நடிகை சஜிதா, பிரியங்கா தேஷ்பாண்டே, வசந்த் உள்ளிட்ட பலர் போட்டியில் கலந்து கொண்டிருக்கின்றனர். நிகழ்ச்சியை ரக்ஷன் மற்றும் மணிமேகலை தொகுத்து வழங்குகின்றனர். நிகழ்ச்சியின் செட்டும் பிரம்மாண்டமாக இருந்தது. 


ரசிகர்களின் விமர்சனம்:


குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டு எபிசோடுகள் நேற்று மற்றும் அதற்கு முந்தைய தினம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. முதல் எபிசோடில் பங்கேற்பாளர்கள் யார் யார், என்னென்ன என்று இன்ட்ரோ செய்து கொள்ள, இரண்டாவது எபிசோடில் மெயின் குக்கிங் போட்டி ஆரம்பித்தது. இதில் செஃப் ஆஃப் தி வீக் பட்டத்தை சுஜிதா வென்றார். இந்த நிலையில், இந்த எபிசோடுகள் குறித்து ரசிகர்கள் இணையத்தில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். 


மேலும் படிக்க | குக் வித் கோமாளிக்கு போட்டியாகுமா மாஸ்டர் செஃப்? வெங்கடேஷ் பட் வெளியிட்ட பதிவு!


வெங்கடேஷ் பட இல்லாமல் ஷோவின் 30 சதவிகித நகைச்சுவை இல்லை என ஒரு ரசிகர் தெரிவித்திருக்கிறார். 



இன்னொரு ரசிகர், இந்த சீசன் நன்றாக இருந்தாலும் முழுமையாக இல்லை என்று தெரிவித்திருக்கிறார். 



ஆரம்பத்தில் கோமாளியாக இருந்த மணிமேகலை தற்போதி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மாறியதை தொடர்ந்து, அவரை பெரிதும் ஸ்க்ரீனில் பார்க்கவே முடியவில்லை என ஒரு ரசிகர் தெரிவித்திருக்கிறார். 



குக் வித் கோமாளி நிகழ்ச்சி, வெங்கடேஷ் பட்டை மிஸ் செய்வதாகவும் செட் மட்டும் பெரிதாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். 



வேறு சேனலுக்கு மாறிய வெங்கடேஷ் பட்:


குக் வித் கோமாளி நிகழ்ச்சி வெற்றி பெறுவதற்கு இன்னொரு தூணாக இருந்தவர், செஃப் வெங்கடேஷ் பட். வெளியில் சொல்லப்படாத காரணங்களுக்காக அவர் இந்த குக் வித் கோமாளி சீசனில் கலந்து கொள்ள முடியாது என்பதை முன்னரே தெரிவித்திருந்தார். அது மட்டுமன்றி, இந்த நிகழ்ச்சியை நடத்தி கொடுத்து வந்த மீடியா மேசன்ஸ் நிறுவனமும் இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியை நடத்தி கொடுக்கப்போவதில்லை என்று அறிவித்திருந்தது. இதையடுத்து, இவர்களின் டீம் சூரியனின் ஆங்கில பெயர் கொண்ட டாப் சேனலுக்கு மாறியிருக்கிறது. அந்த சேனலில் தற்போது


‘Top Cooku Dupe Cooku’ என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது. இதில் செஃப் வெங்கடேஷ் பட் கலந்து கொள்ள, குக் வித் கோமாளியில் இடம் பெற்றிருந்த மோனிஷா ப்ளெஸ்ஸி, ஜிபி முத்து, பரத் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதுவும், கிட்டத்தட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி போலவே இருப்பதால் ரசிகர்கள் இந்த இரு நிகழ்ச்சிகளுக்கும் போட்டி நிலவுமோ என யோசித்து வருகின்றனர். 


மேலும் படிக்க | 42 வயதில் தாயாகும் பிரபல நடிகை! யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ