திடீரென வெடித்த வெங்காய குண்டு... ஒருவர் உயிரிழப்பு, 6 பேர் படுகாயம் - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

Onion Bomb Blast: ஆந்திராவில் வெங்காய குண்டு திடீரென வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார், 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Nov 1, 2024, 11:04 AM IST
  • இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது.
  • வெங்காய குண்டு பயங்கரமாக வெடித்ததில் பெரும் வெடி விபத்து
  • இதில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்தார்.
திடீரென வெடித்த வெங்காய குண்டு... ஒருவர் உயிரிழப்பு, 6 பேர் படுகாயம் - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் title=

Onion Bomb Blast Latest News Updates: தீபாவளி சீசனில் வெடிகள் அதிகம் பயன்படுத்தப்படுவதால் சிறிய தீ விபத்துகள், தீக்காயங்கள் ஆகியவை ஏற்படுவதை பார்த்திருப்போம். சில இடங்களில் துரதிருஷ்டவசமாக பெரிய விபத்துகளும் ஏற்பட்டிருக்கின்றன. இது ஒவ்வொரு தீபாவளிக்கும் தொடர் கதையாகி வருகிறது. எனவே, அரசு தரப்பிலும், தன்னார்வ அமைப்புகளின் தரப்பிலும் தீபாவளியை தீ விபத்து இன்றி பாதுகாப்பாக கொண்டாட தொடர்ந்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இது ஒருபுறம் இருந்தாலும், சிலரோ பாதுகாப்பற்ற வெடிபொருள்களை பயன்படுத்துவதாலும் பெரிய விபத்துகள் ஏற்படும். சட்டவிரோதமாக பாதுகாப்பற்ற வகையில் வெடிகளை தயாரிப்பது, தடை செய்யப்பட்ட வெடி பொருள்களை கையாள்வது ஆகியவை உயிர் சேதத்திற்கும் வழி வகுக்கும் எனலாம். அந்த வகையில், தீபாவளி பண்டிகை (அக். 31) கொண்டாடப்பட்ட நிலையில், ஆந்திராவில் வெடிவிபத்தில் ஒரு உயிரிழந்தார், 6 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெடித்த வெங்காய வெடி

ஆந்திர பிரதேசத்தின் (Andhra Pradesh) எலுரு மாவட்டத்தில் வெங்காய குண்டு இரண்டு பேர் சேர்ந்து இருச்சக்கர வாகனத்தில் வைத்து கொண்டுசென்றபோது இந்த வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. தீபாவளி கொண்டாட்டத்திற்காக அவர்கள் கொண்டு சென்றபோது இந்த கொடூர நிகழ்வு நடந்தேறியது. இதுகுறித்து போலீஸ் மூத்த அதிகாரி கூறுகையில், அவர்கள் கொண்ட சென்ற வெடியில் வெங்காய குண்டு இருந்தது என்றும் மற்ற வெடிகள் கீழே விழுந்த பின்னர் விழத்தொடங்கியது என்றும் கூறினார்.

மேலும் படிக்க | வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்கள் மீது ஏறிய கார்! அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்..

அங்கு கோயில் அருகே சாலையில் இருந்த குழி ஒன்றில் பைக் வேகமாக இறங்கியதால் அந்த குண்டுகள் கீழே விழுந்து வெடித்துச் சிதறியதாக தெரிவிக்கப்படுகிறது. அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் IED குண்டுகளை போன்று இந்த வெங்காய குண்டுகள் செயல்படும் என கூறப்படுகிறது. தற்போது வெளியாகி உள்ள சிசிடிவி வீடியோவை பார்க்கும்போது, ஒரு குறுகிய சாலையில் நேற்று மதியம் 12.17 மணியளவில் ஸ்கூட்டியில் இருவர் செல்கின்றனர். குறுகலான சாலையின் முடிவில் ஒரு ஜங்ஷன் வருகிறது, அதன்பின்னர் அந்த சாலை சற்று அகலமைடைகிறது. அந்த ஜங்ஷனில்தான் 5-6 பேர் அடங்கிய குழு ஒன்று நின்றுகொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது. 

சிதறிய உடல்

திடீரென வெங்காய வெடி வெடித்த உடன் அந்த இடமே கரும்புகை சூழ்ந்தது, காற்றில் காகிதங்கள் பறந்தன. கரும்புகை விலகிய உடன் அதில் இரண்டு, மூன்று பேர் அங்கிருந்து தப்பிப்பதை பார்க்க முடிகிறது. வண்டியின் பாகங்களும் சிதறுவதை பார்க்க முடிகிறது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மருத்துவமனக்கு கொண்டு சென்றுள்ளனர். 

அந்த பைக்கை ஓட்டிய சுதாகர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என தகவல் கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் அவரின் உடல்களும் சிதறிக் கிடந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மருத்துவமனையில் 6 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | இரவில் 3 முறை உடலுறவு வேணும்... ஆபாச படத்திற்கு அடிமையான மனைவி - விவாகரத்து கேட்ட கணவர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News