சன் மியூசிக்கில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட்ஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் கடந்த 2010ஆம் ஆண்டு சின்னத்திரையில் அறிமுகமானவர் மணிமேகலை. பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர். இவர் ஹுசைன் என்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருவீட்டாரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது இருவீட்டாரும் இவர்களை ஏற்றுக்கொண்டனர். இதற்கிடையே கடந்த 2019ஆம் ஆண்டு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் அறிமுகமானார்.



அதனைத் தொடர்ந்து விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மணிமேகலை, பாரதி கண்ணம்மா சீரியலில் கெஸ்ட் ரோலிலும் நடித்திருந்தார்.  குக் வித் கோமாளி மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமாகியுள்ள மணிமேகலை சமூகலைதளங்களில் ஆக்ட்டிவாக இருந்துவருகிறார்.


அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிடும் மணிமேகலை தற்போது தனது வீட்டில் இருந்து விலை உயர்ந்த பைக் ஒன்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றுவிட்டதாக பதிவிட்டுள்ளார்.


 



நண்பரின் வீட்டருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் திருட்டு போயிருப்பதாக அவர் கூறியிருக்கிறார். இச்சம்பவம் தொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 


மேலும் படிக்க | தளபதி 66 படப்பிடிப்பிற்காக விஜய் எடுத்த முக்கிய முடிவு


இந்தச் சூழலில் தங்களுக்கு சொந்தமான பைக்கை நண்பரின் வீட்டில் நிறுத்தி வைத்திருந்தை பார்த்த அடையாளம் தெரியாத நபர்கள் யாரோ திருடி சென்றுவிட்டனர் என மணிமேகலை தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.


மேலும் படிக்க | தொடங்கிவிட்டது கேஜிஎஃப் 3 - தயாரிப்பாளர் அறிவிப்பு


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!