இயக்குனர் செல்வராகவனுக்கு கொரோனா தொற்று!
தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
இயக்குனரும் தற்போது நடிகர் அவதாரம் எடுத்துள்ள இயக்குனர் செல்வராகவன் (Selvaragavan) தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவரை அணுகுமாறும் தெரிவித்துள்ளார். இயக்குனரும் நடிகர் தனுஷின் சகோதரருமான செல்வராகவன் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
ALSO READ | லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் முன்னேற்றம்? மருத்துவர்கள் விளக்கம்
அதன் பிறகு காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற வித்தியாசமான கதை களம் கொண்ட படங்களை இயக்கி சிறந்த இயக்குனர் என்ற பெயரையும் பெற்றார். 7ஜி ரெயின்போ காலனி படத்தின் கதாநாயகி சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்ட செல்வராகவன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். யாரடி நீ மோகினி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என அடுத்தடுத்து படங்களை இயக்கினார்.
தற்போது தனுஷை வைத்து நானே வருவேன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதுமட்டுமின்றி விஜயின் பீஸ்ட் (Beast movie)படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள சாணிக்காயிதம் படம் வெளியாவதற்கு தயாராக உள்ளது, மேலும் மோகன் ஜி இயக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இருக்கிறார் செல்வராகவன். சமீபத்தில் தமிழ் சினிமாவை சேர்ந்த கமல்ஹாசன், விக்ரம், திரிஷா, சத்யராஜ், அருண் விஜய், மீனா, விஷ்ணுவிஷால், குஷ்பூ, வடிவேலு ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | கொரோனா பாதிப்பு; வீட்டு தனிமையில் நடிகை குஷ்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR