லோகேஷ் கனகராஜ் மீது குற்றவியல் நடவடிக்கை - உயர்நீதிமன்றத்தில் மனு!
Director Lokesh Kanagaraj: திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் என மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த ராஜா முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இது தற்போது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி மற்றும் முக்கிய இயக்குநராக லோகேஷ் கனகராஜ் உள்ளார். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ படத்தை இயக்கி உள்ளார். விஜய்யுடன் இணைந்து இரண்டாவது முறையாக இவர் இயக்கிய படம் லியோ. இந்த படம் கடந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்த படம் மிகப்பிரிய ஹிட் அடித்தது. கிட்டத்தட்ட 650 கோடி ரூபாய் வசூல் செய்தது லியோ. இந்த படத்தில் விஜய், திரிஷா, மன்சூர் அலிகான், கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், சஞ்சய் தத் என பலர் நடித்துள்ளனர்.
மேலும் படிக்க | நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன் - நடிகர் விஷால்!
இந்நிலையில், லியோ படத்தில் கலவரம், சட்ட விரோத செயல்கள் கார், இருசக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்குவது, காவல்துறை உதவியுடன் எல்லா குற்றங்களையும் செய்ய முடியும் போன்ற காட்சிகள் மூலம் சமூகத்திற்கு தவறான வழிகாட்டுதல்களை காண்பிக்கிறார். இதுபோன்ற படங்களை தணிக்கை துறையினர் முறையாக ஆய்வு செய்ய வேண்டும், மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜை முறையாக உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும். வன்முறையை தூண்டும் வகையில் காட்சிகளை எடுத்து திரைப்படமாக்கியதற்கு இந்திய தண்டனை சட்டங்களின் படி பல்வேறு பிரிவுகளின் கீழ் இப்பட குழு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என ராஜா முருகன் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் விஜயகுமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராக வில்லை எனவே இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இருப்பினும் எந்த செய்தி சினிமா ரசிகர்கள் மற்றும் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லோகேஷ் கனகராஜ் தற்போது தனது அடுத்த படத்தில் பிசியாக உள்ளார். தலைவர் 171 படத்தை ரஜினியை வைத்து இயக்க உள்ளார். இதற்கான வேலைகளில் தற்போது லோகேஷ் முழுமூச்சில் உள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு வரும் ஏப்ரல் முதல் தொடங்க உள்ளது. சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க, அனிருத் இசையமைக்க உள்ளார். மேலும் லாரன்ஸ், சிவகார்த்திகேயன், ரன்வீர் சிங் ஆகியோர் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் G Squad என்ற தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருந்தார். இதில் முதல் படமாக உறியடி விஜய் நடித்த Fight Club படம் வெளியானது. ஆனால் படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றதால் சரியாக ஓடிவில்லை. அடுத்ததாக தனது உதவி இயக்குனர்களை வைத்து படம் தயாரிக்க உள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ