Bigg Boss Tamil: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது, இன்னும் இரண்டு வாரங்களில் யார் டைட்டில் வின்னர் என்பது தெரியவரும். கடந்த வாரம் நிக்ஸன் மற்றும் ரவீனா வீட்டிலிருந்து வெளியேறினர். தற்போது பிக் பாஸ் வீட்டில் மாயா, பூர்ணிமா, விசித்ரா, அர்ச்சனா, மணி, தினேஷ், விஷ்ணு மற்றும் விஜய் ஆகிய எட்டு பேர் உள்ளனர். இதில் விஷ்ணு நேரடியாக பைனலுக்கு தகுதி பெற்றுள்ளதால் இந்த வரம் மீதமுள்ள ஏழு பேர் நாமினேஷனில் உள்ளனர். இதனால் இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார்கள் என்றும் யாருக்கு டைட்டில் கிடைக்கப் போகிறது என்றும் எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.
Bigg Boss Tamil Season 7 | 3rd January 2024 - Promo 2#Day94
#BiggBossTamil#BiggBossTamil7#BiggBoss7Tamil pic.twitter.com/9H7Jt5CdzO
— Vijay Tv (@vijay_Telev) January 3, 2024
மேலும் படிக்க | நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன் - நடிகர் விஷால்!
பிக் பாஸ் சீசனில் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் அதிகம் சர்ச்சைகள் இருந்தது. பிரதீப் ஆண்டனி வீட்டை விட்டு வெளியேறியதில் இருந்து மாயா மற்றும் பூர்ணிமாவிற்கு அதிக சப்போர்ட் கிடைப்பது வரை அதிக சர்ச்சைகள் எழுந்தது. மேலும் கமல்ஹாசன் மீதும் அதிக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் பணப்பெட்டி வைக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஒரு லட்சத்துடன் வைக்கப்பட்டுள்ள பணப்பெட்டி நேரம் ஆக ஆக அதன் மதிப்பும் கூடிக் கொண்டே இருந்தது. நேற்றைய எபிசோடு வரை 5 லட்சம் ஆக இந்த பணப்பெட்டி இருந்தது. மேலும் இந்த தொகை கூடவும் செய்யலாம் அல்லது குறையவும் செய்யலாம் என்று பிக் பாஸ் தெரிவித்து இருந்தார்.
இன்னிலையில் நேற்று இரவு 10:45 மணிக்கு விசித்ரா பணப்பெட்டியை எடுத்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. 13 லட்சத்துடன் விசித்ரா வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. தனக்கு எப்படியும் டைட்டில் கிடைக்காது என்று உணர்ந்த விசித்திரா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த சீசன் முழுவதும் விசித்திரா மற்றும் தினேஷ் இடையே கடும் சண்டை நிலவியது. மேலும் நேற்றைய நிகழ்ச்சியில் நடந்த ஒரு கேமில் கூட வீட்டில் உள்ள அனைவரும் விசித்திராவிற்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தனர். இதனால் விசித்திரா மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். விசித்ரா பணபட்டியுடன் வெளியேறியது சரிதான் என்று சுரேஷ் தாத்தா தனது யூட்யூபில் பேசியுள்ளார் மேலும் பிரதீபாண்டனி விசித்திரா இப்படி செய்ததில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் விசித்திரா கடைசி வரை விளையாடிருக்க வேண்டும் என்றும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
#BiggBossTamil7 #BiggBossTamil #BiggBossTamilSeason7 #PradeepAnthony openly supports #Vichitra
Doesn’t want her to take the cashbox
Wants her in finalsTo Haters:
Poda andha #Pradeep um kadavulum yangha pakam pic.twitter.com/HElRdJNkzu
— Chubramani (@Harvester_green) January 2, 2024
மேலும் படிக்க | தளபதி 69 படத்தின் இயக்குனர் இவரா? வெளியானது அப்டேட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ