பிக்பாஸ் சீசன் 7 ப்ரோமோ வீடியோ அப்டேட்: தொலைக்காட்சி ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஒரு ரியாலிட்டி ஷோ உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம்தான் முதன் முதலில் தமிழில் பிக் பாஸ் சீசன் தொடங்கப்பட்டது. மற்ற மொழிகளில் இதுவரையில் ஏராளமான சீசன்கள் ஒளிபரப்பாகி இருந்தாலும் தமிழில் ஒளிபரப்பான நிகழ்ச்சிக்கு வரவேற்பு உச்சத்தில் இருந்தது. அதற்கு காரணம் அந்த கான்செப்ட் தமிழ் மக்களுக்கு புதுமையாக இருந்ததே. ஏற்கனவே மக்களுக்கு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றின புரிதல் கொஞ்சம் இருந்தாலும் முதல் முறையாக நமது தமிழில் ஒளிபரப்பாக போகிறது என்பதால் மிகுந்த ஆர்வத்தோடு அதை எதிர் நோக்கினார்கள். ஆர்வத்திற்கு மற்றொரு காரணம் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது என்றால் அதில் ஈர்ப்பு இருக்கத்தானே செய்யும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறு சீசன் தற்போது வெற்றிகரமாக நடந்து முடிந்தது. பிக்பாஸ் ஆறாவது சீசனில் பல பிரபலங்கள் பங்கேற்றனர். அசீம், விக்ரமன், ஷிவின், மைனா நந்தினி, ஆயிஷா போன்ற போட்டியாளர்கள் இதில் கவனம் ஈர்த்தனர். கடைசியில், சின்னத்திரை நடிகர் அசீம் இந்த பிக் பாஸ் 6 சீசனின் டைட்டில் வின்னர் என அறிவிக்கப்பட்டார். விக்ரமன் ரன்னர் அப் பட்டத்தை விக்ரமனும் இரண்டாம் ரன்னர் அப் பட்டத்தை ஷிவினும் பெற்றனர்.


மேலும் படிக்க | 100 மில்லியன் பார்வைகளை கடந்த சலார் டீசர்... கையோடு வெளியான ட்ரெய்லர் அப்டேட்


பிக்பாஸ் 6 நிகழ்ச்சி முடிந்துள்ள நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 7வது நிகழ்ச்சி எப்போது துவங்கும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் 7வது சீசனின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாவனா, மாகபா ஆனந்த், நடிகைகள் உமா ரியாஸ், ரேகா நாயர், கேபிஒய் சரத், தொகுப்பாளர்கள் பாவனா, கோவையின் முதல் பெண் ஓட்டுநர் ஷர்மிளா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றது.


இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து மற்றொரு புதிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான கமல் ஹாசனின் ப்ரோமோ ஷூட் தற்போது சென்னையில் வெற்றிகரமாக நடந்து முடிந்து இருக்கிறது. இதனால், இந்த நிகழ்ச்சி கூடிய விரைவில் ஆரம்பிக்குமா? இல்லை வழக்கம் போல் தான் நிகழ்ச்சி தொடங்குமா? என்ற கேள்வி எழுப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி கமல்ஹாசன் அவர்கள் தற்போது நிறைய படங்களில் கமிட் ஆகி இருப்பதாலும், நாடாளுமன்ற தேர்தல் இருப்பதாலும் இந்த நிகழ்ச்சியை விரைவில் முடிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இதற்கான அப்டேட்டை நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


எத்தனை எபிசோடுகள்? எங்கே படப்பிடிப்பு? 


பிக்பாஸ் நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு நடைபெறுவது வழக்கம். இதுவரை அனைத்து சீசன்களும் அங்குதான் நடைப்பெற்றன. இனி ஆரம்பமாக உள்ள 7ஆவது சீசனும் அங்குதான் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த சீசனின் சுமார் 106 எபிசோடுகள் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த அக்டோபர் மாதம் தொடங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | எல்லாம் ஓகே ஆனால் இதுக்கு மட்டும் நோ - ராகுல் ப்ரீத் சிங் ஓபன் டாக்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ