Bigg Boss Season 7: பிக் பாஸ் சீசன் 7 விரைவில் ஆரம்பம்? எதிர்பார்ப்பை எகிறவைக்கும் அப்டேட்..!

Bigg Boss Tamil 7: கமல் தொகுத்து வழங்கும் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 7, இந்த ஆண்டில் எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.    

Written by - Yuvashree | Last Updated : Jun 28, 2023, 11:54 AM IST
  • கமல் தொகுத்து வழங்கும் பிரபல நிகழ்ச்சி, பிக்பாஸ்.
  • இதன் 7ஆவது சீசன் ஆரம்பமாக உள்ளது.
  • இதுகுறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
Bigg Boss Season 7: பிக் பாஸ் சீசன் 7 விரைவில் ஆரம்பம்? எதிர்பார்ப்பை எகிறவைக்கும் அப்டேட்..! title=

தனியார் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சிகளுள் ஒன்று, பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழ், இந்தி, தெலுங்கு என பலமொழிகளில் நடத்தப்படுகிறது. தமிழில் கமல்ஹாசன் இந்த ஷோவை தொகுத்து வழங்க, இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டில் ஆரம்பித்த இந்நிகழ்ச்சி 7ஆவது சீசனில் அடியெடுத்து வைக்க உள்ளது. 

கடந்த சீசனின் வெற்றியாளர்கள்..

பிக்பாஸ் சீசன் 6 விருவிருப்பாக கடந்த வருடம் நடைப்பெற்றது. இதில், பல பிரபலங்கள் பங்கேற்றனர். அசீம், விக்ரமன், ஷிவின், மைனா நந்தினி, ஆயிஷா போன்ற போட்டியாளர்கள் இதில் கவனம் ஈர்த்தனர். கடைசியில், சின்னத்திரை நடிகர் அசீம் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என அறிவிக்கப்பட்டார். விக்ரமன் ரன்னர் அப் பட்டத்தை விக்ரமனும் இரண்டாம் ரன்னர் அப் பட்டத்தை ஷிவினும் பெற்றனர். கடந்த பிக்பாஸ் சீசனின் வெற்றியாளர் குறித்து தொடர்ந்து சர்ச்சை எழுந்த வண்ணம் இருந்தது. 

மேலும் படிக்க | Bigg Boss Tamil 7: ஆரம்பமானது பிக்பாஸ் சீசன் 7! போட்டியாளர்கள் யார் யார்?

முடிவுக்கு வரும் குக் வித் கோமாளி..

பிக்பாஸ் நிகழ்ச்சியை போல பல ரசிகர்களையும் பார்வையாளர்களையும் கொண்ட நிகழ்ச்சி, குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி விரைவில் நடைப்பெற உள்ளது. இதில் சிவாங்கி, ஸ்ருஷ்டி, புகழ், மோனிஷா, மைம் கோபி, விசித்ரா, சுனிதா போன்ற பலர் பங்கேற்கின்றனர். காமெடி சமையல் நிகழ்ச்சியான இது, மூன்று சீசன்களை கடந்து, 4ஆவது சீசனையும் முடிக்க உள்ளது. இதையடுத்து, பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. 

இவர்கள்தான் இந்த சீசனின் போட்டியாளர்களா?

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பல பிரபலமான நட்சத்திரங்களுடன் விரைவில் தொடங்கவுள்ளது. பலர், இதற்கான ஆடிஷனிற்கும் வந்துள்ளனர். அதில் சிலர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அப்படி தேர்வு செய்யப்பட்டுள்ள போட்டியாளர்கள் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நடிகை உமா ரியாஸ், சரத், மாகப ஆனந்த், நிகழ்ச்சி தொகுப்பாளர் பாவனா போன்ற பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. 

விரைவில் ஆரம்பம்..?

பிக்பாஸ்  நிகழ்ச்சி இந்த ஆகஸ்டு மாதமே தொடங்கும் என முன்னர் கூறப்பட்டது. கமல் தற்போது பெரிய பெரிய படங்களில் நடித்து வருவதால் இது தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் அக்டோபர் மாதம் இந்நிகழ்ச்சி கண்டிப்பாக தொடங்கப்படும் என கூறப்படுகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்தவுடன் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம். 

எத்தனை எபிசோடுகள்? எங்கே படப்பிடிப்பு? 

பிக்பாஸ் நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு நடைபெறுவது வழக்கம். இதுவரை அனைத்து சீசன்களும் அங்குதான் நடைப்பெற்றன. இனி ஆரம்பமாக உள்ள 7ஆவது சீசனும் அங்குதான் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த சீசனின் சுமார் 106 எபிசோடுகள் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த அக்டோபர் மாதம் தொடங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | “நான் ரெடி” பாடலில் மாற்றம் செய்த படக்குழு..! எதிர்ப்புகள் வலுத்ததால் இந்த முடிவா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News