பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘மாரி 2’. கடந்த 2018ம்  ஆண்டு இந்த வெளியானது. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த படத்தின் ரவுடி பேபி என்ற பாடலை தனுஷ் எழுதி பாடி இருந்தார். இந்த பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். மேலும் இதில் தனுஷ், சாய் பல்லவியின் நடனம் ஆடியிருந்தார். 


ரவுடி பேபி பாடலின் வீடியோவை Youtube இல் படக்குழுவினர் வெளியிட்டனர். இணையத்தில் வைரலான இந்த பாடல் சர்வதேச பில்போர்ட் இசைப்பட்டியலிலும் இடம்பெற்று சாதனை படைத்தது. 


இந்நிலையில் தற்போது 800 மில்லியன் பார்வையாளர்களை கடந்து Youtube இல் ரவுடி பேபி பாடல் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அதோடு இந்த பாடல் இதுவரை 3 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது.