தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை பல படங்களிலும் நடித்துள்ளார். விரைவில் டோலிவுட்டிலும் இவர் அறிமுகமாக உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக கோலிவுட்டுக்கு அறிமுகமான நடிகர் தனுஷ். (Dhanush) தனது ஒல்லியான உடல் அமைப்புக்காக வந்த பல்வேறு விமர்சனங்களையும் கடந்து, தற்போதைய தமிழ் சினிமாவில் (Tamil Cinema) மக்கள் மனதில் இடம்பெற்றுள்ளார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களில் நடித்த அவர், பிற மொழி படங்களிலும் நடிக்க துவங்கினார். தமிழ் தவிர்த்து இந்தி, ஆங்கிலம் மாதிரியான படங்களில் தனுஷ் நடித்துள்ளார். 


ALSO READ | Dhanush Movie Update: தனுஷூக்கு ஜோடியாகும் விஜய் பட நாயகி


தற்போது நடிகர் தனுஷ் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் நடிக்க உள்ள முதல் தெலுங்கு படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்க உள்ளார். இவ்வாறு பல்வேறு மொழிகளில் நடித்து வரும் தனுஷை சமூக வலைதளங்களில் பின் தொடர்வோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


இந்நியலையில் தற்போது நடிகர் தனுஷ் ட்விட்டரில் புதிய சாதனையை படைத்துள்ளார். நடிகர் தனுஷை ட்விட்டரில் பின் தொடர்வோர் எண்ணிக்கை 1 கோடியை எட்டி உள்ளது. ட்விட்டரில் 1 கோடி ஃபாலோயர்களை பெறும் முதல் தமிழ் நடிகர் என்ற சாதனையை படைத்துள்ளார் நடிகர் தனுஷ். 



நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அண்மையில் ஜகமே தந்திரம் படம் வெளிவந்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. தொடர்ந்து நடிகர் தனுஷ், ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் இந்தியில் நடித்து வரும் ’அத்ரங்கி ரே’ என்ற படமும் இந்த ஆண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ALSO READ | CINE UPDATES: தனுஷுக்கு தம்பியாகும் பிரபல நடிகர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR