தனுஷின் ‘ஜகமே தந்திரம்’; நாளை வெளியாகிறது ட்ரைலர்..!!
ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன் ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகும் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் தனுஷ் நடிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக, அதன் ட்ரைலர் நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன் ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக படம் திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் எழுந்த நிலையில்ம் தற்போது படத்தின் டிரெய்லர் நாளை (ஜூன் 1) வெளியாகிறது. படம் ஓடிடி (OTT) தளத்தில் வெளியிடப்படுகிறது . ஜூன் 18 நெட்பிளிக்ஸ் ( Netflix) தளத்தில் படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் சஷிகாந்த் தனது வொய் நாட் ஸ்டுடியோஸ் (YNOT Studios) நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.
அதிரடி படமாக எடுக்கப்படும் இப்படத்தின் கதை ஆசிரியராக, அதன் நாயகன் தனுஷ் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல் வெளியானதி அடுத்து, தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ட்வீட் செய்து வருகின்றனர்.
ALSO READ | ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் முக்கிய அட்வைஸ்
ALSO READ | Intimate marriage: சகுனி கதாநாயகின் ரகசிய திருமணத்திற்கு காரணம் என்ன?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR