நஷ்டத்துக்கு காரணம் தனுஷ்தான்... அதிருப்தியில் ஹாட்ஸ்டார்?
நடிகர் தனுஷ் மீது ஹாட் ஸ்டார் நிறுவனம் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசையாக ஓடிடியில் ரிலீஸ் ஆகின்றன. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பை பதிவு செய்தாலும் சூர்யா நடித்த சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றன.
அதேபோல், நடிகர் தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த ஜகமே தந்திரம், ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் நடித்த அத்ரங்கி ரே, கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்த மாறன் ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியாகின. ஆனால் இந்த மூன்று படங்களும் படுதோல்வியை சந்தித்தன.
இந்தச் சூழலில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியான தனுஷின் படங்களான அந்த்ரங்கி ரே, மாறன் ஆகிய படங்கள் தோல்வி அடைந்ததால் தனுஷ் மீது ஹாட்ஸ்டார் நிறுவனம் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.
மேலும் படிக்க | அட இத கவனிக்காம விட்டாச்சே! பீஸ்ட் படத்தில் நடித்திருக்கும் சமந்தா?
தனுஷ் என்ற ஒற்றை மனிதரை நம்பியே அவர் நடித்த படங்களை வாங்கிய ஹாட் ஸ்டார் நிறுவனம், தற்போது அந்தப் படங்கள் மூலம் இழப்பை சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, இனி ஹீரோ என்ற பிம்பத்துக்காக படங்கள் வாங்குவதைவிட கதையின் களம், அது படமாக்கப்பட்ட விதம் என அலசி ஆராய்ந்த பிறகே படங்களை வாங்க அந்த நிறுவனம் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | இரண்டு டாப் ஹீரோக்களுடன் கம்பேக் கொடுக்கும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ?
இதற்கிடையே தனது சொந்த வாழ்க்கையில் சில சிக்கல்களை சந்தித்துவரும் தனுஷ், தனது திரை வாழ்க்கையிலும் சறுக்கலை சந்தித்துவருகிறார். எனவே விரைவில் அவர் கம்பேக் கொடுப்பாரா என தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR