சென்னை: தனுஷ் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தருணம் வந்துவிட்டது. தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் ட்ரைலர் வெளியாகிவிட்டது. இதையடுத்து தனுஷ் ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்தில் உள்ளார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் (Dhanush) நடித்திருக்கும் ஜகமே தந்திரம் படம் நேராக நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இப்படம் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 



முன்னதாக பிப்ரவரி 22 ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியானது. டீசருக்கு ரசிகர்களிடையெ பெரும் வரவேற்பு கிடைத்தது. சென்ற வாரம் படத்தின் மூன்றாவது பாடலும் வெளியானது. இப்பாடல் அனைவரது கனவத்தையும் ஈர்க்கும் வண்ணம் இருந்ததாக கருத்து தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. மாசாக ரிலீசாகியிருக்கும் ட்ரைலர் அனைவரது ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. அசால்டான நடிப்பில் அவருக்கே உரிய பாணியில் தனுஷ் பட்டையைக் கிளப்பியுள்ளார் என்பதை ட்ரைலரை பார்த்தே தெரிந்துகொள்ள முடிகிறது. 



ALSO READ: கலெக்‌ஷனில் கலக்கும் கர்ணன்: Box Office-ஐ மிரள வைத்த 3 நாள் கலெக்‌ஷன் தொகை


சமீபத்தில்தான், ஜூன் 1 ஆம் தேதி ஜகமே தந்திரம் (Jagame Thandhiram) படத்தின் ட்ரைலர் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்தது. கொரோனா காலம் துவங்கியதிலிருந்தே பல தமிழ் திரைப்படங்கள் ஓ.டி.டி தளத்தில் நேரடியாக வெளியாகி வருகின்றன. எனினும், ஜகமே தந்திரம் படத்துக்கு ஒரு தனிச் சிறப்பு உள்ளது. இது வரை ஓ.டி.டி தளத்தில் நடக்காத வகையில், இப்படம் 17 மொழிகளில் டப் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  


ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுடன் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


ALSO READ: தனுஷ் ரசிகர்கள் உற்சாகம், ஜூன் 18 OTT இல் ஜகமே தந்திரம் ரிலீஸ்!


ALSO READ: Intimate marriage: சகுனி கதாநாயகின் ரகசிய திருமணத்திற்கு காரணம் என்ன?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR