தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கர்ணன் படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று வருகின்றது. 1995 ஆம் ஆண்டின் கோடியான்குளம் சாதி கலவரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம், தமிழகத்தில், படம் வெளியான முதல் வார இறுதியில் சுமார் 25 கோடி ரூபாய் கலெக்ஷனை அள்ளியுள்ளது.
சக்கைப் போடு போடும் இந்த படம், இதுவரை தனுஷ் நடித்த படங்களில் மிக பிரம்மாண்டமான துவக்க வார கலெக்ஷனைப் பெற்ற படம் என்று கூறப்படுகின்றது.
கொரோனா (Coronavirus) காரணமாக அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் காரணமாக, படம் வெளியான இரண்டாம் நாளிலிருந்து, திரையரங்குகள் 50 சதவிகித இருக்கை அனுமதியுடன் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமான முறையில் ரசிகர்கள் அனுமதிக்கப்படிருந்தால், இந்த படத்தின் துவக்க வார கலெக்ஷன் பல ரெகார்டுகளை முறியடித்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
' @Dhanushkraja's #Karnan does a box office rampage with ₹8.40 crore Sunday in Tamil Nadu and takes the opening weekend gross to ₹25.0 crore.
Film takes career highest '3-Day' opening weekend for the Actor. pic.twitter.com/VWXbUcE77B
— Cinetrak (@Cinetrak) April 12, 2021
ALSO READ: தனுஷின் 19 வருஷ ரெக்கார்டு பிரேக்கிங், கர்ணன் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் எத்தனை?
கர்ணன் (Karnan) படத்தைப் பற்றி படம் பார்த்த ரசிகர்கள் செய்த ஆக்கப்பூர்வமான பிரச்சாரமே மற்றவர்களையும் படம் பார்க்கத் தூண்டியுள்ளது. சாதிப் பிளவு மற்றும் காவல் துறையின் அத்துமீறல் ஆகியவை படத்தின் முக்கிய கதைக் களமாக உள்ளன. ஒடுக்கப்பட்ட கிராமத்திற்கும் அதன் மக்களுக்கும் ஒரு மிகப்பெரிய காவலனாக தனுஷின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் (Dhanush), லால், ரஜிஷா விஜயன், நட்டி நடராஜன், கெளரி கிஷன் மற்றும் யோகி பாபு நடிப்பில் கர்ணன் படம் உருவாகியுள்ளது. கதிர் நடிப்பில் உருவான பரியேறும் பெருமாள் படத்தில் இயக்குனர் மாரி செல்வராஜின் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கர்ணன் படத்தில் தனுஷும் மாரி செல்வராஜும் முதன் முறையாக இணைந்துள்ளனர். இப்படத்தில் லால், நட்டி, ரஜிஷா விஜயன், யோகி பாபு, லக்ஷ்மிபிரியா சந்திரமௌளி ஆகியோரும் நடித்துள்ளனர்.
ALSO READ: கர்ணன் FDFS திருவிழா, தியேட்டர்களில் குவிந்த தனுஷ் ரசிகர்கள்!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR