தனுஷ் ரசிகர்கள் உற்சாகம், ஜூன் 18 OTT இல் ஜகமே தந்திரம் ரிலீஸ்!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் நெட்பிளிக்ஸில் OTT தளத்தில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாக உள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Apr 27, 2021, 09:21 PM IST
தனுஷ் ரசிகர்கள் உற்சாகம், ஜூன் 18 OTT இல் ஜகமே தந்திரம் ரிலீஸ்!

Dhanush starrer Jagame Thandhiram: தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj) இயக்கியுள்ள படம் ஜகமே தந்திரம். இந்த திரைப்படம் 2020, மே மாதத்தில் வெளியாகவிருந்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக அது தள்ளிப் போனது. 

இந்நிலையில் தற்போது தனுஷ் (Dhanush) நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் (Jagame Thandhiram) நெட்பிளிக்ஸில் OTT தளத்தில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லஷ்மி நடித்துள்ளார். மேலும் சந்தோஷ் நாராயணனின் (Santhosh Narayanan) இசை அமைத்துள்ளார். 

ALSO READ | மிரட்டும் Jagame Thandhiram டீஸர்! இந்த OTT இல் ரிலீஸ் ஆகும் ஜகமே தந்திரம்!

இதற்கிடையில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அனைவரின் பாராட்டுக்களை பெற்றது.

 

 

இந்நிலையில் இந்தியாவின் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு மற்றும் திரையரங்குகள் மூட வேண்டும் என கட்டுப்பாடுகள் மத்திய மாநில அரசுகள் பிறப்பித்து வருகின்றன. அதனால் ஜகமே தந்திரம் திரைப்படம் ஜூன் 18 நெட்பிளிக்ஸ் (Netflix) OTT தளத்தில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை வொய் நாட் ஸ்டியோஸ் நிறுவனம் மற்றம் ரிலையன்ஸ் என்டேர்மைன் மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. 

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News