தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். தமிழ் மொழி மட்டுமல்லாது, மற்ற இந்திய படங்களிலும் மேலும் ஹாலிவுட் மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.  சமீபத்தில் அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார்.  இந்நிலையில் துருவங்கள் 16, மாஃபியா போன்ற திரைப்படங்களை இயக்கிய டைரக்டர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்  மாறன். இதில் தனுஷிற்கு ஜோடியாக மாளவிகா மோஹனன் நடித்துள்ளார். இந்த படத்தை சத்யஜோதி நிறுவனத்தில் டி.ஜி .தியாகராஜன் தயாரிப்பில் உருவாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட பெரு நகரங்களில் நடைபெற்றது. மேலும் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் தனுஷின் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டு நல்லதொரு வரவேற்பை பெற்றது. 



மேலும் இந்த படத்திற்கு  ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட்  குறித்து ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  'மாறன்'  திரைப்படத்தின்  பாடல்கள்  விரைவில் வெளியாகும் என்று இசையமைப்பாளர்  ஜி.வி. பிரகாஷ் அதில் தெரிவித்து இருந்தார். நீண்ட நாட்களாக மாறன் படத்தின் அப்டேடிற்க்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இது தீபாவளி பரிசாக அமைந்துள்ளது.


 



ALSO READ அடுத்தடுத்து OTT-யில் வெளியாகும் மோகன்லாலின் 4 படங்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR