Dhanush Next With Manjummel Boys Director Chidambaram: நடிகர் தனுஷ் நடிக்க உள்ள அடுத்த படத்தை சிதம்பரம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சமீபத்தில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை இயக்கி இருந்தார். தற்போது தொடர்ந்து பல படங்களை நடித்து வரும் தனுஷ், ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கி வருகிறார் என்பதை இந்த கட்டுரையில் காணபோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் தனுஷ்:
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர், தனுஷ் (Actor Dhanush). கோலிவுட், ஹாலிவுட், பாலிவுட் என மூன்று திரையுலகிலும் நடிக்கும் நாயகனாக நடிக்க ஆரம்பித்தார். தற்போது 50 படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகர் தனுஷ், தனது 51 வது படத்தில் இவர் நடித்து வருகிறார். இந்த படத்தை சேகர் கமூலா இயக்கியுள்ளார். படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கத் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு இறுதியில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி பின்பு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தெலுங்கு முன்னணி நடிகர் நாக அர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் படத்திற்கு குபேரா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.


தனுஷின் ராயன்:
மறுபுறம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிக்கும் 'ராயன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படம் ஜூன் மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார்.


மேலும் படிக்க | கோலிவுட்டில் மவுசு இல்லை.. பாலிவுட்டில் ஆரவார வரவேற்பு.. டபுள் மடங்கு சம்பளத்தை உயர்த்திய ஜோதிகா


இளையராஜாவாக தனுஷ்:
இதைத் தொடர்ந்து தற்போது இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடித்து வருகிறார். இந்த படத்தை அருண் மாதேஷ் வரன் இயக்குகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பும் விரைவில் தொங்கப்படவுள்ளது.


மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனர் இயக்கத்தில் தனுஷ்:
இந்நிலையில் தற்போது சூப்பர் டூப்பர் ஹிட் படமான மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை இயக்கிய இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.



பல படங்களில் கமிட், சம்பளத்தை உயர்த்தினார் தனுஷ்:
இதனிடையே தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நடிகர் தனுஷ் ஒரு படத்திற்கு 20 முதல் 30 கோடி வரை சம்பளம் பெற்று வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இளையராஜாவாக அவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதற்காக அவர் சுமார் ரூ.50 கோடி வரை சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க | கமல் ரசிகர்களுக்கு ட்ரீட்... இந்தியன் 2 முதல் பாடல் வெளியானது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ