கோலிவுட்டில் மவுசு இல்லை.. பாலிவுட்டில் ஆரவார வரவேற்பு.. டபுள் மடங்கு சம்பளத்தை உயர்த்திய ஜோதிகா

Written ByVijaya Lakshmi
Published: May 23, 2024, 07:24 AM IST|Updated: May 23, 2024, 07:24 AM IST

Jyothika Salary Details Per Movie தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடித்து வருகிறார். அதன்படி தற்போது இவர் ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கி வருகிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதன் விவரத்தை பார்ப்போம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்துகொண்ட பிறகு குடும்பம் மற்றும் குழந்தைகளை கவனிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். அதன்பின் ஒருகட்டத்தில் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்த ஜோதிகா மீண்டும் கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் ஹிந்தி சைத்தான் படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

Jyothika1/7

ஜோதிகா

தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், திருமணத்திற்கு பின் 6 ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். 

 

Jyothika Come Back2/7

ஜோதிகா கம்-பேக்

இதையடுத்து அவர் 2015ஆம் ஆண்டு 36 வயதினிலே திரைப்படம் மூலமாக கம்-பேக் கொடுத்தார். இந்த படம் நல்ல வரவேற்பினை பெற்றதை அடுத்து, தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். 

 

Jyothika Bollywood Entry3/7

பாலிவுட்டில் ஜோதிகா

தொடர்ந்து கதையின் நாயகியாக நடித்து வரும் ஜோதிகா தற்போது பாலிவுட் பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார் என்பதை நாம் அறிவோம். 

 

Shaitaan4/7

சைத்தான்

சமீபத்தில் இவர் நடிப்பில் சைத்தான் எனும் திரைப்படம் இந்தியில் வெளிவந்தது. அதேபோல்  மலையாளத்தில் மம்மூட்டியுடன் இவர் இணைந்து காதல் தி கோர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படங்களுமே அமோக வரவேற்பினை பெற்றது. 

 

Srikanth5/7

ஸ்ரீகாந்த்

இதனிடையே கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் தான் ஸ்ரீகாந்த். ராஜ்குமார், ஜோதிகா உள்பட பலர் நடித்த இந்த படத்தை துஷார் ஹிரநந்தனி என்பவர் இயக்கி இருந்தார். மேலும் சைத்தான் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனம் இந்த படத்திற்கும் கிடைத்தது.

 

Jyothika Salary6/7

ஜோதிகா சம்பளம்

தற்போது கோலிவுட் மக்கள் மனதில் இடம் பிடித்து இருந்த ஜோதிகா பாலிவுட் மக்கள் மனதையும் பிடித்து வருகிறார். தொடர்ந்து இந்தியில் ஹிட் படங்களை கொடுத்து வரும் ஜோதிகா தற்போது தமது சம்பளத்தை உயர்த்தி உள்ளாராம்.

 

Jyothika Salary Per Movie7/7

ஜோதிகா சம்பள விவரம்

சோலோ ஹீரோயினாக பட்டையை கிளப்பி வரும் நடிகை ஜோதிகா ஒரு படத்தில் நடிக்க ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். இதனால் நடிகை ஜோதிகாவிற்கு பாலிவுட்டில் மவுசு அதிகமாகி உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.