கமல் ரசிகர்களுக்கு ட்ரீட்... இந்தியன் 2 முதல் பாடல் வெளியானது

Kamal Haasan Paaraa Song Video: கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் முதல் பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Kamal Haasan Paaraa Song Full Video: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

1 /5

கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்தியன் 2 (Indian 2) திரைப்படம். தில் உலக நாயகம் கமல்ஹாசனுடன் எஸ்ஜே சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், மறைந்த விவேக், மறைந்த மனோபாலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

2 /5

இந்த திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 12 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.160 கோடிக்கு வாங்கியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.  

3 /5

இந்தியன் 2 படத்தை ஆரம்பித்ததில் இருந்து பிரச்சனைகளுக்கு மேல் பிரச்ச்னை கிளம்பியது. முதலில் படத்தின் கதையினால் கமல் ஹாசனுக்கும் (Kamal Haasan) ஷங்கருக்கும் சண்டை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த காரணத்தால் படப்பிடிப்பில் சில காலம் தாமதம் ஏற்பட்டதை அடுத்து, படத்தின் தயாரிப்பிலும் சர்ச்சைகள் எழுந்தது. இதையெல்லாம் தாண்டி, இந்த படத்தில் நடித்த நடிகர்களும் இறந்து போயினர்.

4 /5

இதனிடையே இந்தியன் 2 திரைப்படம் வெளியானதற்கு 6 மாதங்கள் கழித்து இந்தியன் 3 திரைப்படம் வெளியாகும் என சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

5 /5

இப்படத்தின் முதல் சிங்கிளான ‘பாரா’ பாடல் இன்று வெளியாகியுள்ளது. தற்போது அந்தப் பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பாரா வருவது ஒராட் படையா என தொடங்கும் இந்த பாடல் கேட்போரை சிலிர்க்க செய்யும் வகையில் அமைந்துள்ளது. https://t.co/7fCJ2eFNq6 ‘Ulaganayagan’ @ikamalhaasan An @anirudhofficial Musical Lyrics - @poetpaavijay #Siddharth @MsKajalAggarwal @Rakulpreet @priya_Bshankar #Vivek @iam_SJSuryah @actorsimha @thondankani @GulshanGroverGG @itspiyushmishra #ZakirHussain #NedumudiVenu… — Shankar Shanmugham (@shankarshanmugh) May 22, 2024