Dhanush starrer Jagame Thandhiram: தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj) இயக்கியுள்ள படம் ஜகமே தந்திரம். இந்த திரைப்படம் 2020, மே மாதத்தில் வெளியாகவிருந்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக அது தள்ளிப் போனது. முன்னதாக படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதாக இருந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் படத்தை ஓடிடி தளத்துக்கு விற்றதாக தகவல்கள் கசிந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தற்போது ஜகமே தந்திரம் (Jagame Thandhiram) படத்தின் டீஸர் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் படி தற்போது ‘ஜகமே தந்திரம்’ படத்தின் டீஸர் வெளியானது. ஹாலிவுட் கலைஞர்கள், அதிரடி சண்டைக்காட்சிகள் என டீஸரானது படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறது.



Also Read | #Suriya40 படம் குறித்து இயக்குனர் பாண்டிராஜ் ட்வீட் செய்த முக்கிய அப்டேட்!!


 



 


இந்த படத்தில் சந்தோஷ் நாராயணனின் (Santhosh Narayananஇசை படத்திற்கு பெரும் பலமாக இருக்கும் எதிர்பார்க்கலாம். டீஸ்ர மூலம் இந்த படம் நல்ல ஆக்ஷன் காமெடி பாணி இருக்கும் என்று வெளிப்படுகிறது. நெட்ஃப்ளிக்ஸ் யூடியூப்பில் வெளியாகியிருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் டீஸர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.


இந்நிலையில் தனுஷ் (Dhanush) ஆசையை நிராகரிக்கும் வகையில் படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த் படத்தை நெட்பிளிக்ஸ் தளத்திற்கு விற்றுவிட்டார். அத்தளத்தில் நேரடியாக வெளியாகும் முதல் பெரிய படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | நடிகர் தனுஷின் பிறந்தநாள் பரிசாக வெளியானது கர்ணன் TitleLook!


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR