நடிகர் தனுஷின் பிறந்தநாள் பரிசாக வெளியானது கர்ணன் TitleLook!

தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தில் டைட்டில் லுக் வெளியாகி வைரலாகி இருக்கிறது...!

Last Updated : Jul 28, 2020, 01:22 PM IST
நடிகர் தனுஷின் பிறந்தநாள் பரிசாக வெளியானது கர்ணன் TitleLook!

தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தில் டைட்டில் லுக் வெளியாகி வைரலாகி இருக்கிறது...!

தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகிய ‘கர்ணன்’ திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று வெளியாகும் என கடந்த 2 நாட்களுக்கு முன்னரே இயக்குனர் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், தனுஷின் பிறந்த நாளாகிய இன்று "கர்ணன்" படத்தின் டைட்டில் போஸ்டர் அட்டகாசமாக வெளியாகியுள்ளது. சூரியனை நோக்கி பாயும் ஒரு வாளை பலர் ஒன்று சேர்ந்து பிடித்து உள்ளது போல் இந்த டைட்டில் போஸ்டர் உள்ளது. மேலும், இந்த டைட்டில் போஸ்டரில் ”நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது” என்று இயக்குனர் மாரி செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார். இதனால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ALSO READ | “எனக்கு எதிராக பாலிவுட்டில் ஒரு பெரிய கும்பல் உள்ளது”: இசைப்புயல் AR Rahman!!

மேலும், கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வரும் கர்ணன் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். டைட்டில் லுக் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ள நிலையில் இன்று மாலை 5. 55 மணிக்கு கர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றும் வெளியிடப்படும் என தயாரிப்பாளர் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே இன்று காலை தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’ஜகமே தந்திரம்’ என்ற படத்தில் ’ரகிட’ என்ற பாடல் ரிலீஸ் ஆனது என்பதும் அந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் பட்டையை கிளப்பி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More Stories

Trending News