மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தமிழில் விரைவில் வெளிவரவுள்ள திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'.   இந்த படம் வெளியாவதில் பல மாற்றங்கள் ஏற்பட்டு தற்போது படத்தின் வெளியீடு இறுதி செய்யப்பட்டு இருக்கிறது.  அதன்படி தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் ஆகஸ்ட் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.  சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் தனுஷ் இதில் டெலிவரி பாயாக நடிப்பதாக தெரிகிறது.  தனுஷ் அவரது சமூக வலைதள பக்கத்தில் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் அதிகாரபூர்வ வெளியீட்டு தேதியை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் மோஷன் பிக்ச்சர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



மேலும் படிக்க | லோகேஷுக்கு கார்.. சூர்யாவுக்கு வாட்ச்.. அனிருத்துக்கு கமல் கொடுத்த கிஃப்ட் என்ன தெரியுமா?


கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தை ஆகஸ்ட்-18ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படும் நிலையில், இவர்கள் இருவரின் படங்கள் ஒரே நாளில் வெளியாகுகிறது எனும் செய்தி பரபரப்பை கிளப்பியுள்ளது.  இதேபோல ஏற்கனவே சிம்பு மற்றும் தனுஷின் படங்கள் ஒரே நாளில் வெளியானது.  2004ம் ஆண்டு சிம்பு நடித்த 'மன்மதன்' படமும், தனுஷ் நடித்த 'ட்ரீம்ஸ்' படமும் ஒரே தினத்தில் வெளியான நிலையில், தற்போது இரண்டாவது முறையாக இரு நட்சத்திரங்களின் படங்களும் மோதிக்கொள்ளப்போவதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டியுள்ளது.



இருப்பினும் 'வெந்து தணிந்தது காடு' படம் எந்த தேதியில் வெளியாகும் என்பது குறித்த எவ்வித அதிகாரபூர்வ தகவல்களையும் படக்குழு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், பிரகாஷ்ராஜ் மற்றும் பாரதிராஜா போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.  


மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜைவிட அதிக சம்பளம் வாங்கும் நெல்சன் திலீப்குமார்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR