தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்!! தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனான தனுஷ் மீண்டும் ஒரு ஆங்கில படத்தில் நடிக்கவுள்ளார்.   சூப்பர் ஸ்டார் தனுஷ், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான 'தி கிரே மேன்' படத்தில் நடிக்கவுள்ளார். 'அவென்ஜர்ஸ்: எண்ட்கேம்' இயக்குனர் இரட்டையர் - ருஸ்ஸோ சகோதரர்களால் இப்படம் இயக்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரவிருக்கும் ஒரு பெரிய பட்ஜெட் ஹாலிவுட் படத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்ற செய்தி இன்று அதிகாலை உறுதிபடுத்தப்பட்டது. இப்படத்தில் கிறிஸ் எவன்ஸ், ரியான் கோஸ்லிங் மற்றும் அனா டி அர்மாஸ் பொன்ற பிரபலமான நடிகர் பட்டாளம் உள்ளது. இந்த படத்தில் தனுத் நடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில், இது அவரது இரண்டாவது ஹாலிவுட் படமாக இருக்கும்.



இதற்கு முன்னர் 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த 'தி எக்ஸ்டிராடனரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்’ படத்தில் தனுஷ் (Dhanush) நடித்தார். இப்படம் விமர்சன ரீதியான பல பாராட்டுதல்களைப் பெற்றது.


தற்போது தனுஷ் நடிப்பில் வரவிருக்கும் ஸ்பை-த்ரில்லர், 200 மில்லியன் அமெரிக்க டாலர் (American Dollar) பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. இது 2009 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த மார்க் கிரீனியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படவுள்ளது. இந்த படம் ஒரு கூலிப்படை கொலையாளி மற்றும் முன்னாள் சிஐஏ அதிகாரியின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதையைக் கொண்டிருக்கும்.


கோஸ்லிங் என்ற கதாபாத்திரத்தின் வளர்ச்சியையும் அவரைத் துரத்தும் முன்னாள் சி.ஐ.ஏ அதிகாரி லோய்ட் ஹேன்செனின் முயற்சிகளையும் அடிக்கபடையாக கொண்டு கதைக்களம் அமையும் என செய்திகள் தெரிவிக்கின்றன.


ALSO READ: விக்னேஷ் சிவனை கலாய்த்த சமந்தா! செம்ம வைரல் வீடியோ!


அந்தோணி மற்றும் ஜோ ருஸ்ஸோவும் தங்கள் பேனரின் கீழ் இந்த படத்தை தயாரிக்கவுள்ளனர். படத்தின் ஸ்கிரிப்டை ஜோ ருஸ்ஸோ ‘அவென்ஜர்ஸ்: எண்ட்கேம்’ திரைக்கதை எழுத்தாளர்கள் கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் ஸ்டீபன் மெக்ஃபீலி ஆகியோருடன் இணைந்து எழுதியுள்ளார்.


உலகம் முழுவதும் எங்கெங்கு படப்பிடிப்பு நடக்கும் என்பது பற்றி இறுதி செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில், லாஸ் ஏஞ்சல்ஸில் (Los Angeles) ஜனவரி மாதம் படப்பிடிப்பைத் தொடங்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.


தனுஷ், அனா மற்றும் மற்ற நடிகர்களின் கதாப்பாத்திரங்களைப் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.


இதைத் தவிர, ‘அத்ரங்கி ரே’ படம் மூலம், பாலிவுட்டிலும் (Bollywood) தனுஷ் மீண்டும் காணப்படுவார். இதில் அவருடன் அக்ஷய் குமார், சாரா அலி கான் ஆகியோரும் நடித்துள்ளனர்.


ALSO READ: விஜயின் மாஸ்டர் படம் குறித்து புதிய அப்டேட் என்ன தெரியுமா?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR