2016-ஆண்டு வெளியான 'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன்.  இவர் தற்போது நடிகர் தனுஷை வைத்து 'மாறன்' என்கிற ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படத்தை இயக்கியுள்ளார்.  இந்த படத்தில் மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, ஸ்ம்ருதி வெங்கட், கிருஷ்ணகுமார், பாலசுப்ரமணியன், மகேந்திரன், அமீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | ஓய்வில்லாமல் பிசியாக நடித்து வரும் சிம்பு!


ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.  கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் நடத்தப்பட்டது.  இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்து விட்டது.   இந்த படம் திரையரங்குகளில் வெளியாகாது என்றும் பட வெளியீட்டு உரிமை குறித்து படக்குழு OTT தளத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்ட்டது.



ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான அஜித்தின் 'வலிமை' படம் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா பரவல் காரணமாக இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.  இந்நிலையில் தனுஷின் 'மாறன்' படம் வருகின்ற பிப்ரவரி மாதம்  Disney Plus Hotstar OTT இயங்குதளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.  மேலும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



அதேபோல ஹாலிவுட்டில் தனுஷ் நடிக்கும் த்ரில்லர் கதையம்சம் கொண்ட படமான 'The Gray Man' படத்தை Netflix OTT இயங்குதளம் இந்த ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  ஏற்கனவே கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் மற்றும் அட்ராங்கிரே படங்கள் OTT  இயங்குதளங்களில் ரிலீசான நிலையில் தற்போது இந்த இரண்டு படங்களும் OTT -ல் வெளியாக உள்ளது.


ALSO READ | இத்தனை பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? ஷாக்கிங்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR