தோனி தயாரிப்பில் நயன்தாரா! மறுப்பு தெரிவித்த தயாரிப்பு நிறுவனம்!
கிரிக்கெட் வீரர் தோனி தயாரிக்கும் படத்தில் நயன்தாரா நடிக்கப்போவதாக வெளியான தகவல்கள் போலியானது என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமாக இருக்கும் மஹேந்திர சிங் தோனிக்கு ஏரளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. முன்னணி திரை பிரபலங்களுக்கு எந்த அளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளதோ அதே அளவு தோனிக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் தோனி சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார், இவரது தயாரிப்பு நிறுவனத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் உதவியாளராக இருந்து வந்த சஞ்சய் என்பவர் இணைந்துள்ளார் என்றும், இவரின் மூலமாக தோனி தமிழில் படங்களை தயாரிக்க இருப்பதாகவும் அண்மையில் சில செய்திகள் வெளியானது.
மேலும் படிக்க | இந்தியில் நடித்து நேரத்தை வீணாக்க மாட்டேன் - மகேஷ் பாபு அதிரடி
மேலும் தோனி தயாரிக்கும் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க போகிறார் என்கிற தகவல் இணையதள பக்கங்களில் தீயாக பரவி வந்தது. என்னதான் செய்திகள் இணையத்தில் வட்டமடித்தாலும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் இணையத்தில் பரவிய இத்தகைய செய்திகள் போலியானது என்று தோனியின் தயாரிப்பு நிறுவனம் அதன் வலைதள பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து தோனி எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கூறுகையில், 'தோனி எண்டெர்டெயின்மெண்ட் சஞ்சய் என்கிற பெயரில் யாருடனும் பணியாற்றவில்லை. எங்கள் நிறுவனம் தற்போது யாரையும் பணியமர்த்தவில்லை, அதனால் யாரும் இதுபோன்ற போலியான தகவல்களை நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும் எங்கள் தயாரிப்பு குழு வேறொரு வித்தியாசமான திட்டத்தை செய்து வருகிறது, விரைவில் அந்த அற்புதமான திட்டம் குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்வோம், அதுவரையில் காத்திருங்கள்' என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும் தோனி நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | விக்ரமிற்கு முன்பே கமல் படத்தில் நடித்துள்ள சூர்யா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR