ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா நடிப்பில் இரத்தம் ரணம் ரௌத்திரம் படம் நேற்று வெளியானது. இந்நிலையில் இப்படம் பான் இந்தியா என்று சொல்லும் அம்சத்துக்குப் பெருமை சேர்த்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்னிந்திய சினிமாவில் ஒரு ட்ரெண்ட் செட்டராக இருப்பவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. பாகுபலி மூலம் பான் இந்தியா படம் என்ற ட்ரெண்டைத் தொடங்கி வைத்தார். ஒரு மாநிலத்தின் மொழியில் வெளியாகும் படம் அண்டை மாநில மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் நான்கைந்து மொழிகளில் வெளியாவதையே பான் இந்தியா படம் என்கிறோம்.


அந்த வகையில் பாகுபலி படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியானது. பல மொழிகளில் வெளியாவது மட்டுமே பான் இந்தியா படமாகி விடாது. அப்படத்தின் கதைக்களம் எல்லா மாநில மக்களாலும் தொடர்புபடுத்திக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். அப்படித்தான் பதவி ஆசை, பங்காளி பிரச்சினை என்பதை மையக் கருவாகக் கொண்டு பாகுபலி உருவானது. 


இதேபோல் கேஜிஎஃப், புஷ்பா, ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் வெளியாகின. தமிழிலும் வலிமை, எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள் வெளியாகின. இந்நிலையில் ட்ரெண்ட் செட்டர் இயக்குநரான ராஜமௌலியின் RRR திரைப்படம் பான் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கவில்லை என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.


மேலும் படிக்க | RRR படத்தின் முதல் நாள் கலெக்ஷன் இத்தனை கோடியா?



பான் இந்தியா படம் என்று சொல்ல வைக்க வேண்டும் என்பதற்காகவே இயக்குநர் ராஜமௌலி இந்தியிலிருந்து ஆலியா பட், அஜய் தேவ்கனை நடிக்க வைத்துள்ளார் என்றும், ஹாலிவுட்டில் இருந்து எட்வர்ட், நடிகை ஒலிவியா மொரிஸ், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி எனப் பல மொழி நடிகர்களை நடிக்க வைத்துள்ளதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வியாபார உத்திக்காகவே பான் இந்தியா அம்சத்தைப் பயன்படுத்தி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 


கதைக்களத்தைப் பொறுத்தவரையில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதை என்று மேலோட்டமாகச் சொல்லப்பட்டாலும், அதன் போக்கும் திரைக்கதையும் வழக்கமான தெலுங்கு மசாலா படமாகவே உள்ளதாகவும், எல்லா மொழி மக்களுக்கும் பொருந்தும் கதையாக இல்லையென்றும் சொல்லப்படுகிறது. ஹீரோயிசம் என்ற பெயரில் ராஜமௌலி செய்திருக்கும் பல்வேறு அபத்தங்களைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் திரை விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். 


மேலும் படிக்க | மெட்ராஸ், அசுரன், கர்ணன் பாணியில் ஆர்ஆர்ஆர்: அக்கட தேசத்தை அசரவைத்த இன்ஸ்பிரேஷன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G