மெட்ராஸ், அசுரன், கர்ணன் பாணியில் ஆர்ஆர்ஆர்: அக்கட தேசத்தை அசரவைத்த இன்ஸ்பிரேஷன்

ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா நடிப்பில் இரத்தம் ரணம் ரௌத்திரம் படம் இன்று வெளியானது. அதன் நோக்கம், இலக்கு எல்லாம் மெட்ராஸ், அசுரன், கர்ணன் பாணியில் அமைந்துள்ளதைப் பார்க்க முடிந்தது. அந்தவகையில் இத்தகைய தமிழ்ப் படங்கள் அக்கட தேசத்திலும் அகத்தூண்டுதலை ஏற்படுத்தியிருப்பதை உணரமுடிகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 25, 2022, 08:24 PM IST
  • பழங்குடி சமூகத் தலைவராக நடித்த ஜூனியர் என்.டி.ஆர் கல்வி கொடு அண்ணா என்கிறார்.
  • பீரியட் படத்தில் கல்வியின் அவசியத்தை வசனமாக வைத்த விதத்தில் ராஜமௌலி முனைப்பு மதிக்கத்தக்கது
  • அகத் தூண்டுதலால் இந்த வசனம் இடம்பெற்றுள்ளதாக நெட்டிசன்கள் வரவேற்றுள்ளனர்
மெட்ராஸ், அசுரன், கர்ணன் பாணியில் ஆர்ஆர்ஆர்: அக்கட தேசத்தை அசரவைத்த இன்ஸ்பிரேஷன் title=

ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா நடிப்பில் இரத்தம் ரணம் ரௌத்திரம் படம் இன்று வெளியானது. அதன் நோக்கம், இலக்கு எல்லாம் மெட்ராஸ், அசுரன், கர்ணன் பாணியில் அமைந்துள்ளதைப் பார்க்க முடிந்தது. அந்தவகையில் இத்தகைய தமிழ்ப் படங்கள் அக்கட தேசத்திலும் அகத்தூண்டுதலை ஏற்படுத்தியிருப்பதை உணரமுடிகிறது. 

பாகுபலி படங்களுக்குப் பிறகு ராஜமௌலி இயக்கிய படம், ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் இணைந்து நடித்த படம் என்பதால்  ஆர்ஆர்ஆர் படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. படத்தின் பிரம்மாண்டம், எமோஷனல் காட்சிகள், இரு ஹீரோக்களின் நடிப்பு ஆகியவை பெரிதும் பாராட்டப்பட்டு வருகின்றன. ராஜமௌலியின் மேக்கிங் திறமையை அனைவரும் சிலாகித்து வருகின்றனர். இந்நிலையில் படத்தில் நிறைய குறியீடுகள், புராண- இதிகாசத் தழுவல்கள், கதாபாத்திரக் கட்டமைப்புகள் ஆகியவை கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றன. 

சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலகட்டத்தில் இருபெரும் புரட்சியாளர்களின் கதையாகப் படம் இருந்தாலும், இதில் ஆயுதம் குறித்த வசனம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதில் இறுதியில் முத்தாய்ப்பாக என்ன வேண்டும் கேள் என்று ராம்சரண் கேட்க, பழங்குடி சமூகத் தலைவராக நடித்த ஜூனியர் என்.டி.ஆர் கல்வி கொடு அண்ணா என்கிறார். இந்த வசனம் இப்போது பேசுபொருள் ஆகியுள்ளது. 

மேலும் படிக்க | ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர், ராம் சரணுக்கு வெற்றி மகுடம் சூட்டியதா?- RRR விமர்சனம்

தமிழில் சாதி, அதிகார வர்க்கம், மோதல், வன்முறை ஆகியவற்றைத் தோலுரித்துக் காட்டிய திரைப்படங்கள் எல்லாம் கல்வியே மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று போதித்தன. பா.இரஞ்சித்தின் மெட்ராஸ் திரைப்படம் அதை மிகவும் அழுத்தமாகச் சொன்னது. அந்த வரிசையில் வெற்றிமாறனின் அசுரன் திரைப்படமும் அதே கருத்தை வலியுறுத்தியது. நம்மகிட்ட காடு இருந்தா எடுத்துகிடுவானுவ, ரூவா இருந்தா புடிங்கிடுவானுவ, ,ஆனா படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது சிதம்பரம் என்று தனுஷ் பேசியது வேற லெவலில் ரீச் ஆனது. மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள், கர்ணன் திரைப்படங்களும் கல்வி, வேலைவாய்ப்பின் அவசியத்தை எடுத்துரைத்தன. 

இப்போது அக்கட தேசத்திலும் இந்தக் குரல் வலுவாக எழுந்துள்ளதைப் பார்க்கமுடிகிறது. பீரியட் படத்தில் கல்வியின் அவசியத்தை வசனமாக வைத்த விதத்தில் ராஜமௌலி, மதன் கார்க்கியின் முனைப்பு மதிக்கத்தக்கது என்றும், தமிழ்ப் படங்களில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் அடிப்படையில் அகத் தூண்டுதலால் ஆர்ஆர்ஆர் படத்தில் இந்த வசனம் இடம்பெற்றுள்ளதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வரவேற்றுள்ளனர். 

மேலும் படிக்க | RRR Box office: 800 கோடி வசூல், பிளாக்பஸ்டர் சாதனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

 

 

Trending News