அஜய் ஞானமுத்து விக்ரமை வைத்து இயக்கியிருக்கும் படம் கோப்ரா. இதில் கேஜிஎஃப் புகழ் ஸ்ரீநிதி கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், ஜான் விஜய், மிருணாளினி உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏ.ஆர். ரஹ்மான இசையமைத்திருக்கும் இப்படத்தை லலித் குமார் தயாரித்திருக்கிறார். ஆகஸ்ட் 11ஆம் தேதி திரையரங்குகளில் படமானது வெளியாகிறது.


இந்நிலையில் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் படக்குழுவினர், திரைத்துறையினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



விழாவில் பேசிய இயக்குநர் அஜய் ஞானமுத்து, “இமைக்கா நொடிகள் படம் வெளியாவதற்கு முன் தயாரிப்பாளர் லலித் குமார் என்னை அழைத்து, சீயான் விக்ரம் அவர்களின் கால்ஷீட் இருக்கிறது. அவர்களை வைத்து படமொன்றை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறோம். பணியாற்ற இயலுமா? என கேட்டார்.


எப்படி என் மீது அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கான உயரத்தை, நான் கடக்க வேண்டிய உயரத்தை அவர் நிர்ணயித்தார். என்னுடைய பெற்றோர்களே படத்தை தயாரித்திருந்தாலும் இந்த அளவிற்கு செலவழித்திருக்கமாட்டார்கள். தயாரிப்பாளர் லலித்குமார் என் மீதும், என்னுடைய குழுவினர் மீதும், அபார நம்பிக்கை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் 'கோப்ரா'வை உருவாக்கி இருக்கிறார்.


 



நான் 50 சதவீத அளவிற்கு நேர்த்தியை எதிர்பார்த்தால் அவர் 100 சதவீதம் அளித்து அசத்துவார். படப்பிடிப்பு தளத்தில் எனக்கும், அவருக்கும் இடையே சிறிய போட்டியே நடைபெறும். அதில் அவரே வெற்றி பெறுவார். அப்படியொரு ஆர்ட்டிஸ்ட் அவர்.


மேலும் படிக்க | எழுத்தாளர் ஆனார் சமந்தா... 


படப்பிடிப்பு தளத்தில் நான் எந்த காட்சியை விவரித்தாலும், என் எதிர்பார்ப்பை கடந்து, அந்த காட்சியை வியக்கும் அளவிற்கு விக்ரம் நடிப்பார். அவரின் நடிப்பு திறமையை கண்டு எனக்குள் சிறிய பொறாமையே ஏற்படும்” என்றார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR