சூப்பர் ஸ்டாரை அடுத்தடுத்து இயக்கும் சிவகார்த்திகேயன் நண்பர்கள்
நெல்சன் திலீப்குமாரை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170-வது படத்தை கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாத்த படத்தை முடித்தவுடன் ஓய்வில் இருந்த ரஜினிகாந்தின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது. சூப்பர் ஸ்டாரின் 169வது படத்தை இயக்க பலரும் முயற்சி செய்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் நண்பரான நெல்சன் திலீப்குமாருக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. வெற்றி மாறன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்கள் சூப்பர் ஸ்டாரிடம் கதை சொல்லியதாக தகவல் வெளியான நிலையில் நெல்சன் தீலிப்குமாரின் கதையை டிக் அடித்தார் சூப்பர் ஸ்டார்.
மேலும் படிக்க | ரஜினிகாந்த் - நெல்சன் புதிய படம்! சன்பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போதைய சூழலில் நடிகர் அஜித்தை தவிர விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட மிகப்பெரிய ஸ்டார்களின் படங்கள் அனைத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்து வருகிறது. சூப்பர் ஸ்டார் 169 படத்திற்கான சூட்டிங் இன்னும் தொடங்கப்படாத நிலையில், அவரின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார்? என்ற அப்டேட் சுடச்சுட வெளியாகியுள்ளது. அந்தப் படத்தையும் நடிகர் சிவகார்த்திகேயனின் நண்பரே இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது கனா படத்தை இயக்கிய இயக்குநர் அருண் ராஜா காமராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170-வது படத்தை இயக்க உள்ளாராம். தயாரிப்பாளர் போனிக்கபூரிடம் தன்னுடைய கதையை அவர் தெரிவித்துள்ளார். அந்தக் கதைக்கு அவர் ஓகே சொன்னதால், சூப்பர் ஸ்டாரிடமும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் கூறியுள்ளார். கதை பிடித்துப்போனதால் நடிகர் ரஜினிகாந்த் ஓகே சொல்லியிருக்கிறாராம். நெல்சன் திலீப்குமாரின் படத்தின் சூட்டிங் தொடங்கிய பிறகு, புதிய படத்துக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
மேலும் படிக்க | பேட்ட' படத்தில் நீக்கப்பட்ட காட்சி வெளியானது!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR