'பேட்ட' படத்தில் நீக்கப்பட்ட காட்சி வெளியானது!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் டெலீடட் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 10, 2022, 08:33 PM IST
  • கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 165வது படம் 'பேட்ட'.
  • இந்த திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்ததது
'பேட்ட' படத்தில் நீக்கப்பட்ட காட்சி வெளியானது! title=

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 165வது படம் 'பேட்ட'.  இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.  இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், மாளவிகா மோகனன், திரிசா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சிவாஜி குருவாயூர், சனத் ரெட்டி, குரு சோமசுந்தரம், சசிக்குமார், சபீர் கல்லரக்கல் போன்ற பலர் நடித்திருந்தனர்.  இந்த படம் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.  

ALSO READ | ஓய்வில்லாமல் பிசியாக நடித்து வரும் சிம்பு!

இந்த திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்ததது, அனிருத் இசையமைப்பில் பாடல்கள் யாவும் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.  இது இளைஞர்கள் மட்டுமல்லாது, குடும்பத்துடன் அனைவரும் பார்க்ககூடிய படமாக அமைந்தது.  இப்படத்தில் ரஜினிகாந்தின் நடிப்புக்கு இணையாக விஜய் சேதுபதியின் நடிப்பும் பேசப்பட்டது.

ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இந்த படத்தின் மூன்றாவது வருடத்தை கொண்டாடும் வகையில் இப்படத்திலிருந்து டெலிட் செய்யப்பட்ட காட்சி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.   இன்னொரு டீ சாப்பிடலாமா என்ற வரியுடன் இந்த காட்சி ஆரம்பிக்கிறது.  இதில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதியை முதல்முறை சந்திக்கும்படியாக காட்சி அமைந்துள்ளது.  தனது அப்பா அறைந்துவிட்டதை நினைத்து விஜய்சேதுபதி கோபமாகவும், வருத்தத்துடனும் புலம்புகிறார்.  இந்த காட்சிக்கு பின்னர் தான் விஜய் சேதுபதி ஆடும் 'தப்பாடு மாறா' எனும் பாடல் தொடங்குகிறது.  இந்த டெலீடட் காட்சி தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.  அஜித்தின் விசுவாசம் படமம், பேட்ட படமும் ஒன்றாக வெளியானது என்பது குறிப்பிடதக்கது.

 

ALSO READ | மணிரத்னம் இயக்கத்தில் ஹீரோவாக களமிறங்கும் சித் ஸ்ரீராம்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News