நந்தா, பிதாமகன் போன்ற சிறந்த படங்களை தொடர்ந்து கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு பாலா-சூர்யா கூட்டணி புதிய படம் மூலம் இணைந்துள்ளது.  ஏற்கனவே இருவரின் கூட்டணியில் வெளிவந்த இரண்டு படங்களுமே சிறப்பாக இருந்த நிலையில் தற்போது இவர்கள் கூட்டணியில் உருவாகிப்போகும் இந்த புதிய படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் எதிர்பார்ப்பு பெருகியுள்ளது.  கடந்த சில மாதங்களாகவே பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக செய்திகள் இணையத்தில் பரவி வந்து, தற்போது இது உண்மையாகி உள்ளது.  சமீபகாலமாகவே சூர்யா நடிப்பில் வெளியான படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது, சில தினங்களுக்கு முன்னர் வெளியான எதற்கும் துணிந்தவன் படம் திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | எதிர்பார்ப்பை எகிறவைக்கும் சூர்யா-41: காரணம் இதுதான்!


சூர்யாவின் 41 வது படமாக அமையவிருக்கும் இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது.  இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் தான் இசையமைக்கிறார்.  மீண்டும் பாலா இயக்கத்தில் நடிப்பது குறித்து சூர்யா நெகிழ்ந்து ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.  இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், அதர்வா போன்றோர் நடிக்க இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியானது.  இவ்வாறு இந்த திரைப்படம் குறித்து ஒவ்வொரு செய்திகளாக பேசப்பட்டு வரும் சமயத்தில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது, ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 



அதாவது பாலா-சூர்யா கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை திரையரங்கில் வெளியிடாமல் நேரடியாக ஓடிடியில் வெளியிடலாமா என்று படக்குழு யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஏற்கனவே சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரை போற்று' மற்றும் 'ஜெய் பீம்' போன்ற படங்கள் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  திரையங்குகளில் வெளியாகும் படங்களை எந்த அளவிற்கு ஆர்வத்துடன் ரசிகர்கள் பார்க்கிறார்களோ அதே அளவிற்கு தற்போது பலரும் ஓடிடியில் வெளியாகும் படங்களை ஆர்வம் குறையாமல் பார்த்து வருகின்றனர்.  இந்நிலையில் ஏற்கனவே வெளியான இரண்டு படங்களும் சிறந்த வரவேற்பை பெற்ற நிலையில், இப்படமும் ஓடிடியில் வெளியானால் நல்ல வரவேற்பை பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | ஏப்ரல் முதல் தேதியில் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR