ஏப்ரல் முதல் தேதியில் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்!

திரையரங்குகளில் வெளியான சில திரைப்படங்கள் தற்போது ஓடிடி இயங்குதளங்களில் வெளியாகவுள்ளது.

Written by - RK Spark | Last Updated : Mar 29, 2022, 04:11 PM IST
  • பீஷ்மபர்வம் ஏப்ரல் 1ம் தேதி வெளியாகிறது.
  • ஹே சினாமிகா ஏப்ரல் 1ம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி இயங்குதளத்தில் வெளியாகிறது.
  • ராதே ஷியாம் ஏப்ரல் 1ம் தேதி வெளியாகிறது.
ஏப்ரல் முதல் தேதியில் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்! title=

அமல் நீரத் இயக்கத்தில் மலையாள மொழியில் உருவான கேங்ஸ்டர் ஆக்ஷன் த்ரில்லர் படம் 'பீஷ்மபர்வம்'.  இப்படத்தில் மம்மூட்டி, ஸ்ரீநாத் பாஸி, சௌபின் ஷாஹிர், நதியா மொய்டு, பார்ஹான் பாசில், திலீஷ் போத்தன், அனகா போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர்.  அமல் நீரத் தயாரிப்பில் உருவான இந்த படம் மார்ச் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.  தற்போது இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடி இயங்குதளத்தில் ஏப்ரல் 1ம் தேதி வெளியாகிறது.  

BheeshmaParavam

மேலும் படிக்க | வலிமை பாணியில் பீஸ்ட் : அப்டேட் கேட்டு தவிக்கும் ரசிகர்கள்

பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் துல்கர் நடிப்பில் வெளியான படம் 'ஹே சினாமிகா'. காஜல் அகர்வால், அதிதி ராவ், ஷியாம் பிரசாத் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்தது.  மார்ச் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் தற்போது ஏப்ரல் 1ம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி இயங்குதளத்தில் வெளியாகிறது.

HeySinamika

ராதாகிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான 'ராதே ஷியாம்' படம் மார்ச்-11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.  இப்படத்தில் ஜெகபதி பாபு, சத்யராஜ், பாக்கிய ஸ்ரீ, சத்யன் போன்ற பலரும் நடித்துள்ளனர்.  ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இந்த படம் வெற்றியை பெறவில்லை.  தற்போது இந்த படம் அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி இயங்குதளத்தில் ஏப்ரல் 1ம் தேதி வெளியாகிறது.  

radheshyam

இதே தினத்தில் கமல்.கே.எம் இயக்கத்தில் மலையாள மொழியில் உருவான 'படா' திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி இயங்குதளத்தில் வெளியாகிறது.  மார்ச்-10ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படத்தில் குஞ்சாக்கோ கோபன், ஜோஜூ ஜார்ஜ், விநாயகன், திலீஷ் போத்தன், மம்முட்டி போன்ற பலரும் நடித்துள்ளனர்.  

pada

இதனையடுத்து அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி இயங்குதளத்தில் சரத் மேனன் இயக்கத்தில் மலையாள மொழியில் உருவான 'வெயில்' படமும் ஏப்ரல்-1ம் தேதி வெளியாகிறது.  இப்படத்தில் ஷேன் நிகம், ஷைன் டாம் சாக்கோ, ஸ்ரீரேகா போன்ற பலர் நடித்துள்ளனர்.

மேலும் படிக்க | கே.ஜி.எப்-2 படத்தில் நடித்திருக்கும் முக்கிய தமிழ் நடிகர்! சஸ்பென்ஸ் வைத்த படக்குழு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News