பொய்யான செய்தி பரப்ப வேண்டாம்! வலைப்பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த திருப்பதி பிரதர்ஸ்!
உத்தம வில்லன் மிகப்பெரிய லாபகரமான படம் என்று இயக்குனர் திரு லிங்குசாமி கூறியதாக பொய்யான தகவலை பரப்பியுள்ளனர் என்று திருப்பதி பிரதர்ஸ் தெரிவித்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு கமல்ஹாசன் எழுத்தில், ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் வெளியான படம் உத்தம வில்லன். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் பூஜா குமார், ஊர்வசி, நாசர், கே பாலச்சந்தர் மற்றும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் நடித்து இருந்தனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள் மற்றும் ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ஒருவர் கொடிய நோயால் அவதிப்படுகிறார். இறுதியில் என்ன ஆனது என்பதை உணர்ச்சிபூர்வமாக உத்தம வில்லன் படம் பேசி இருந்தது. இந்த திட்டம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது.
மேலும் படிக்க | சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு
இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸுக்கு பெரும் நஷ்டத்தை இப்படம் ஏற்படுத்தியது. இந்த நஷ்டத்தில் இருந்து தற்போது வரை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மீளவில்லை. கடந்த 2022ம் ஆண்டு இது குறித்து பேசிய லுங்குசாமி, "படத்தின் தோல்விக்கு கமல்ஹாசன் அவர்களை குறைசொல்ல மாட்டேன். கமல் போன்ற மிகப்பெரிய கலைஞர் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் படம் எடுக்க மாட்டார். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். முழு மனதுடன், முழு ஆற்றலுடன் அந்த படத்தை எடுத்தார்" என்று கூறி இருந்தார். இந்நிலையில் உத்தம வில்லன் படம் குறித்து தற்போது வதந்திகள் வெளியான நிலையில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், "உலக திரை ரசிகர்களுக்கு அன்பான வணக்கம், தீபாவளி, பையா, வேட்டை, இவன் வேற மாதிரி, வழக்கு எண் 18/9 கும்கி, கோலிசோடா, மஞ்சப்பை, சதுரங்க வேட்டை, ரஜினிமுருகன் போன்ற தரமான மிகப்பெரிய வெற்றிப்படங்களையும், தேசிய விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளையும் பெற்ற படங்களை தயாரித்து வெளியிட்ட எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்தான் பத்மஸ்ரீ திரு கமலஹாசன் அவர்களை வைத்து FIRST COPY (முதல் பிரதி) அடிப்படையில் தயாரித்த திரைப்படமான "உத்தம வில்லன்" எங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தையும், நிதி நெருக்கடியையும், ஏற்படுத்திய படமாகும். இது திரு.கமலஹாசன் அவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.
"உத்தம வில்லன்" திரைப்படத்தின் மிகப்பெரிய நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக திரு.கமலஹாசன் அவர்களும் அவரது சகோதரர் அமரர் திரு.சந்திரஹாசன் அவர்களும் எங்கள் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படம் நடித்து தயாரித்து தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளனர். அதற்குண்டான வேலைகளில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் சமூக வலைத்தளமான "வலை பேச்சு" என்கிற YOUTUBE சேனலில் உத்தம வில்லன் மிகப்பெரிய லாபகரமான படம் என்று இயக்குனர் திரு லிங்குசாமி கூறியதாக இன்று (17-04-2024 ) தவறான தகவல்களை கூறியுள்ளனர். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற தவறான பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | ‘விசில் போடு’ பாடலுக்கு கிடைத்த நெகடிவ் விமர்சனம்! மதன் கார்கி கூறிய பதில்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ