Winner Movie First Choice For Kaippulla : தமிழ் திரையுலகில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நின்று பேசும் மீம் மெட்டீரியலாக ஒரு சில படங்கள் மட்டுமே இருக்கும். அப்படிப்பட்ட படங்களுள் ஒன்றுதான் வின்னர். இந்த படம், 2003ஆம் ஆண்டு வெளியானது. சுந்தர்.சி இயக்கியிருந்த இந்த படத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் குறித்து சுந்தர்.சி, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வின்னர் திரைப்படம்:


கோலிவுட்டில் ‘கைப்புள்ள’ என்ற பெயர் பிரபலமாவதற்கும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற பெயர் பிரபலமாவதற்கும் காரணம், வின்னர் திரைப்படம்தான். இப்படத்தில் கிரண் கதாநாயகியாக நடிக்க நம்பியார், ரியாஸ் கான், உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை, நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சி பகிர்ந்திருக்கிறார். 


முதலில் நடிக்க இருந்தவர்..


வின்னர் படம், பெரிய ஹிட் அடிக்க காரணம் படத்தின் கதை-கதாநாயகன் என்பதை தாண்டி, வடிவேலுவின் காமெடிதான். “தம்பி பாேங்க தம்பி..இது வாலிப வயசு..” என பல டைலாக்குகளை இன்றும் நாம் மனப்பாடமாக வைத்திருக்கிறாேம். இந்த கைப்புள்ள கேரக்டரில் வடிவேலுவை தவிர வேறு யாரையும் நினைத்து பார்க்க முடிகிறதா? 



இது குறித்து பேசியிருக்கும் சுந்தர்.சி, வடிவேலுவிற்கு முன்னர் அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க இருந்தது, மறைந்த நடிகர் விவேக் என்று கூறியிருக்கிறார். விவேக்கும் சுந்தர்.சியும் சடை, ஐந்தாம் படை, பெருமாள், முரட்டுக்காளை, அரண்மனை 3 உள்ளிட்ட பல படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்திருக்கின்றனர். ஏதோ சில காரணங்களுக்காக அவரை நடிக்க வைக்க முடியாததால், வடிவேலுவை நடிக்க வைத்ததாக அவர் கூறியிருக்கிறார். 


மேலும் படிக்க | குக் வித் கோமாளி 5ல் அதிக சம்பளம் வாங்கும் குக் ‘இவர்’தான்! ஒரு நாளைக்கு இவ்வளவா?


தெலுங்கு படத்திலிருந்து காபி..


வின்னர் படம் குறித்து பேசிய சுந்தர்.சி, தனது இரு படங்களை சில தெலுங்கு படங்கள் அப்படியே காபி அடித்து விட்டதாகவும், இதனால் கடுப்பாகி தெலுங்கு படத்தில் இருந்து சில காட்சிகளை எடுத்து வின்னர் படத்தில் உபயோகித்ததாக தெரிவித்தார். ஆனால், அந்த காபி அடித்த காட்சிகளை கூட சில தெலுங்கு பட இயக்குநர்கள் விட்டு வைக்காமல் காபி அடித்ததாக சிரித்துக்கொண்டே கூறினார். 


விஜய்க்கு கதை சொன்ன சுந்தர்.சி


விஜய், பல ஆண்டுகளாக திரையுலகில் இருந்து வந்தாலும் அவர் ஒரு முறை கூட சுந்தர்.சி படத்தில் நடித்ததில்லை. இது குறித்து சுந்தர்.சி இடமே கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ஒரு முறை தான் விஜய்க்கு கதை சொல்லியதாக கூறினார். அந்த கதையை கேட்ட விஜய், முதல் பாதி வரை தனக்கி பிடித்திருப்பதாகவும், இரண்டாம் பாதி தனக்கு ஒத்துவரும் என தெரியவில்லை எனக்கூறி படத்தில் நடிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். கடைசியில் அந்த படம் எடுக்கப்பட்டு, அது ஊத்திக்கொண்டதாகவும் சுந்தர்.சி தெரிவத்தார். அது என்ன படம் என்று தன்னால் வெளியில் கூற முடியாது என்றும், கூறினால் அதில் நடித்தவர்களின் மனம் புண்படும் என்றும் பேசினார். 


மேலும் படிக்க | உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள சாக்‌ஷி அகர்வால் செய்யும் விஷயம்! அட..இவ்வளவுதானா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ