குக் வித் கோமாளி 5ல் அதிக சம்பளம் வாங்கும் குக் ‘இவர்’தான்! ஒரு நாளைக்கு இவ்வளவா?

Cooku With Comali 5 Contestants Salary : ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சியாக விளங்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனில் ஒரு போட்டியாளருக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : May 8, 2024, 08:17 PM IST
  • குக் வித் கோமாளி 5ல் யார் அதிகம் சம்பளம் வாங்குவது?
  • பிரியங்கா தேஷ்பாண்டேவின் சம்பளம் என்ன?
  • சீரியல் நடிகை சுஜிதாவின் சம்பளம் எவ்வளவு?
குக் வித் கோமாளி 5ல் அதிக சம்பளம் வாங்கும் குக் ‘இவர்’தான்! ஒரு நாளைக்கு இவ்வளவா?  title=

Cooku With Comali 5 Contestants Salary : தமிழ் ரசிகர்கள் மத்தியில் தற்போது, பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் சின்னத்திரை நிகழ்ச்சி, குக் வித் கோமாளி. 2019ஆம் ஆண்டு தாெடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, தற்பாேது 6வது சீசனை எட்டியிருக்கிறது. இந்த சீசனில் பல்வேறு போட்டியார்கள் கலந்து கொண்டிருக்கும் நிலையில் இதில் அதிக சம்பளம் வாங்குவது யார் என்பது குறித்து பார்ப்போமா? 

ஷாலின் சோயா: 

குக் வித் கோமாளியில் குக்காக இருப்பவர், ஷாலின் சோயா. இவர், இணையதள பிரபலம் டிடிஎஃப் வாசனின் காதலி என கூறப்படுகிறது. இவருக்கு, ஒரு ஷோவிற்கு சுமார் ரூ.10 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. 

திவ்யா துரைசாமி:

துணை நடிகையான திவ்யா துரைசாமியும் குக் வித் கோமாளியில் கவனம் ஈர்க்கும் குக்காக இருக்கிறார். இவருக்கு ஒரு ஷோவிற்கு சுமார் ரு.12ஆயிரம் வரை பேமண்ட் கொடுக்கப்படுகிறதாம்.

அக்‌ஷய் கமல்: 

சீரியல் நடிகரான அக்‌ஷய் கமல், குக் வித் கோமாளி 5ல் குக்காக இருக்கிறார். இவருக்கு சுமார் ரூ.10 ஆயிரம் கொடுக்கப்படுகிறதாம். 

ஸ்ரீகாந்த் தேவா: 

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நன்றாக சமைக்கும் போட்டியாளர்களுள் ஒருவராக இருக்கிறார். இவருக்கும் ஒரு ஷோவிற்கு ரூ.10 ஆயிரம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது

பூஜா வெங்கட்:

பிரபல பாடகியான பூஜா வெங்கட், குக் வித் கோமாளியில் ஒரு ஷோவிற்கு ரூ.9 ஆயிரம் ரூபாய் வாங்குகிறாராம்.

இர்ஃபான்:

பிரபல யூடியூபரான இர்ஃபான், குக் வித் கோமாளியில் குக்காக இருக்கிறார். இவருக்கு ஒரு ஷோவிற்கு சுமார் ரூ.15 ஆயிரம் கொடுக்கப்படுகிறதாம்

விடிவி கணேஷ்:

திரையுலகில் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர், விடிவி கணேஷ், இவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனில் குக்காக இருக்கிறார். இவருக்கு ஒரு ஷோவிற்கு சுமார் ரூ.15 ஆயிரம் கொடுக்கப்படுகிறதாம்.

மேலும் படிக்க | CWC 5: குக் வித் கோமாளி 5-ல் புதிய கோமாளி! அட ‘இந்த’ சீரியலின் வில்லி நடிகையா..

சுஜிதா: 

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் பிரபலமான சுஜிதா, இந்த சீசனில் நன்றாக சமைக்கத்தெரிந்த குக்குகளுள் ஒருவராக இருக்கிறார். இவருக்கு சுமார் ரூ.18 ஆயிரம் வரை கொடுக்கப்படுகிறதாம் 

வசந்த்: 

சீரியல் நடிகரான வசந்த், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இளம் போட்டியாளர்களுள் ஒருவராக இருக்கிறார். இவருக்கு சுமார் ரூ.10 ஆயிரம் கொடுப்பதாக கூறப்படுகிறது

பிரியங்கா: 

நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா, கடந்த இரண்டு வாரங்களாக நன்றாக நகைச்சுவை செய்யும் போட்டியாளர்களுள் ஒருவராக இருக்கிறார். இவருக்கு சுமார் ரூ.18 ஆயிரம் ரூபாய் பேமண்டாக வழங்கப்படுகிறதாம். 

இது, குக்குகளின் சம்பள விவரங்கள் தானே தவிர, உண்மையான சம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை. 

மேலும் படிக்க | நடிகர் ஸ்ரீகாந்தின் பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா? இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களே..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News