இந்திய பண்டிகைகள் எது வந்தாலும், அதை குறிவைத்து பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்று. ரஜினி-கமல் படங்கள் முதல் அஜித்-விஜய் படங்கள் வரை போட்டி ஹீரோக்களின் பல படங்கள் தீபாவளி சமயங்களில் ஒரே சமயத்தில் வெளியாகி பெரிதாக ஹிட் அடித்துள்ளன. அப்படி, ஒவ்வொரு தீபாவளிக்கும் வெளியாகி மாபெரும் வசூல் செய்த தமிழ் படங்களின் லிஸ்டை இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சந்திரமுகி:


தமிழ் சினிமாவை இந்திய அளவில் பேச வைத்து படங்களுள் ஒன்று சந்திரமுகி. 2005ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை, பி.வாசு இயக்கியிருந்தார். மலையாளத்தில் ரிலீஸாகி வெற்றி பெற்ற படத்தின் தமிழ் ரீ-மேக் ஆக இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்ட சைக்காலஜி த்ரில்லர் படம் இது. 2005ஆம் ஆண்டு தீபாவளியின் பாேது, கமலின் மும்பை எக்ஸ்பிரஸ், விஜய்யின் சச்சின் ஆகிய படங்களும் சந்திரமுகி படத்துடன் சேர்ந்து வெளியானது. இதில், அனைத்தின் வசூலையும் மிஞ்சி 200 நாட்களுக்கும் மேல் சந்திரமுகி படம்தான் தியேட்டரில் ஓடியது. 


பொல்லாதவன்:


வெற்றி மாறன் என்ற பெயரை ஊர் அறிய பதியவைத்த படம், பொல்லாதவன். தனுஷ் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை இயக்கி ‘வெற்றி’ இயக்குநராக அறிமுகமானார், வெற்றி மாறன். ஒரு சாதாரண இளைஞன், அவனது பைக்கை காணவில்லை, அதற்கு காரணம் ஒரு லோக்கல் வில்லன், கடைசியில் என்ன ஆனது? இந்த லைனை கதையாக வைத்து ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் படத்தை எடுத்திருப்பார் வெற்றி. இப்படத்தை போலவே பாடல்களும் மெகா ஹிட் அடித்தது. 2007 ஆம் ஆண்டு தீபாவளியை ஒட்டி இப்படம் வெளியானது. தனுஷின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் இது. 


மேலும் படிக்க | ஜிகர்தண்டா டபுள்X Vs ஜப்பான்: எந்த படம் நல்லாயிருக்கு? எதை முதலில் பார்க்கலாம்?


துப்பாக்கி:


‘துப்பாக்கி’ படத்தின் பெயரை கேட்ட உடனே, பலருக்கு அப்படத்தின் பி.ஜி.எம் மண்டைக்குள் ஓடும். அந்த அளவிற்கு அப்போதைய குழந்தைகள் மற்றும் இளசுகள் மத்தயில் இப்படம் பெரிதாக பிரபலமாகி இருந்தது. தொடர் தோல்வியை கொடுத்த வந்த நடிகர் விஜய், இப்படம் மூலம் மீண்டும் ஹிட் ஹீரோவாக மாறினார். சொல்லப்பாேனால், இந்த படத்தை அடுத்து விஜய் அவரது சிறப்பான நடிப்பை எந்த படத்திலும் கொடுக்கவில்லை என்று சில ரசிகர்கள் கருத்துகளை தெரிவிக்கின்றனர். 2011ஆம் ஆண்டு தீபாவளியை குறி வைத்து வெளியான துப்பாக்கி, மெகா ஹிட் அடித்தது. 


கைதி:


கார்த்தியின் திரை வாழ்க்கைக்கும், லோகேஷ் கனகராஜ்ஜின் சினிமா வாழ்க்கைக்கும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம், கைதி. 2019ஆம் ஆண்டு தீபாவளியை குறி வைத்து மூன்று படங்கள் வெளியாகின. இதில், மூன்று படங்களுக்குமே நல்ல விமர்சனம்தான். குறிப்பாக கைதி படத்திற்கு கிடைத்த வரவேற்பே வேறு. கார்த்தியும், இப்படத்தில் நடிப்பதற்கு முன்பு தொடர்ந்து தோல்வி படங்களாக கொடுத்து வந்தார். இப்படம், அவர் திரை பயணத்தை இன்னும் ஒரு படி மேலே தூக்கி விட்டது. 


பிகில்:


விஜய்க்கு இன்னொரு பெரிய ப்ளாக் பஸ்டர் படமாக அமைந்தது, பிகில் திரைப்படம். விஜய்-அட்லீயின் கூட்டணி ஏற்கனவே தெறி மற்றும் மெர்சல் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்திருந்தது. இந்த நிலையில்தான், மீண்டும் அவர் பிகில் படம் மூலம் அட்லீயுடன் கைக்கோர்த்தார். 2019ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான மூன்று படங்களில் மாபெறும் வசூல் மழை குவித்த படம், இதுதான். 


மேலும் படிக்க | தீபாவளிக்கு ஒளிபரப்பாகும் லேட்டஸ்ட் தமிழ் படங்கள்! எதை, எந்த சேனலில் பார்க்கலாம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ