ஜிகர்தண்டா டபுள்X Vs ஜப்பான்: எந்த படம் நல்லாயிருக்கு? எதை முதலில் பார்க்கலாம்?

Japan Vs. Jigarthanda DoubleX Review: இந்த வருட தீபாவளிக்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் ஜப்பான் படமும் வெளியாகியுள்ளன. இதில் எதை முதலில் பார்க்கலாம்? இங்கு பார்ப்போம் வாங்க. 

Written by - Yuvashree | Last Updated : Nov 10, 2023, 03:08 PM IST
  • தீபாவளியை முன்னிட்டு ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா படங்கள் வெளியாகியுள்ளன.
  • இதில் ஒரு படத்திற்கு அதிகளவில் நல்ல விமர்சனங்கள் வெளிவந்துள்ளன.
  • எந்த படத்தை முதலில் பார்க்கலாம்?
ஜிகர்தண்டா டபுள்X Vs ஜப்பான்: எந்த படம் நல்லாயிருக்கு? எதை முதலில் பார்க்கலாம்? title=

வருடா வருடம் அனைத்து தீபாவளிக்கும் தமிழ் திரையிலக ஸ்டார் நடிகர்களின் முக்கிய படங்கள் வெளியாவது சகஜம். ஆரம்பத்தில் தீபாவளியின் போது கமல்-ரஜினியின் படங்கள் ஒன்றாக தமிழில் வெளியாகி வந்தன. இதையடுத்து இந்த தீபாவளி ரேஸில் அஜித்-விஜய்யின் படங்களும் நுழைந்தன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இவர்களின் படங்கள் பிற பண்டிகைகளில் வெளியாகிறதே அன்றி, தீபாவளியில் வெளியாவதில்லை. இந்த இடத்தை நிரப்ப, தற்போது வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்கள் வந்துவிட்டன. அந்த வகையில், இந்த ஆண்டின் (Diwali 2023) தீபாவளியை முன்னிட்டு வெளியாகியுள்ள படங்கள் என்னென்ன தெரியுமா? 

ஒரே சமயத்தில் வெளியான 4 படங்கள்:

இந்த தீபாவளிக்கு தமிழ் சினிமாவில் இருந்து நான்கு படங்கள் வெளியாகியுள்ளன. கார்த்தியின் 25வது படமான ஜப்பான் (Japan Movie) நவம்பர் 10ஆம் தேதியான இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை ராஜூ முருகன் இயக்கியுள்ளார். இந்த படத்தை விட அதிகளவில் எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய படம், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் (Jigarthanda DoubleX). கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த இரண்டு படங்களும் தீபாவளியை ஒட்டி வெளியான படங்களில் மிகவும் முக்கிய படங்களாக கருதப்படுகிறது. 

விக்ரம் பிரபு-ஸ்ரீதிவ்யா நடித்துள்ள ரெய்டு (Raid Movie) படமும் இன்றுதான் வெளியாகியுள்ளது. இந்த படத்தை கார்த்தி என்பவர் இயக்கியுள்ளார். காப்-க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனங்களை கொடுத்துள்ளனர். இதனுடன் நாளை வெளியாகவுள்ள படம் கிடா. இதில், தமிழ் சினிமாவில் துணை நடிகராக வலம் வரும் காளி வெங்கட் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை (நவம்பர் 11) வெளியாகிறது. 

ஜிகர்தண்டா 2 Vs. ஜப்பான்:

தனித்துவமிக்க தமிழ் சினிமா இயக்குநர்களின் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருப்பவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இயக்கிய பீட்ஸா, ஜிகர்தண்டா, பேட்ட உள்ளிட்ட படங்கள் ரசிகரகள் மத்தயில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பினை கொடுத்துள்ளனர். படம், பக்கா ஆக்ஷன் கதை நிரம்பியதாக உள்ளதாக படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | Jigarthanda DoubleX படம் எப்படி? ரசிகர்களின் விமர்சனம் இதுதான்!

ஜப்பான் படத்திற்கும் இன்று காலையில் இருந்து ட்விட்டரில் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்து ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் அனு இமானுவேல் முக்கிய கதாப்பாத்திரமாக வருகிறார். உண்மையான கொள்ளை சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காதல்-ரொமான்டிக் ஹீரோவாக சுற்றிக்கொண்டிருந்த கார்த்தி, கடந்த சில ஆண்டுகளாக புதுப்புது தோற்றங்கள் நிறைந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டிருக்கிறார். அப்படி அவர் புதிதாக தேர்ந்தெடுத்து நடித்த கதைதான், ஜப்பான். 

எந்த படம் நன்றாக இருக்கிறது? 

ஜிகர்தண்டா மற்றும் ஜப்பான் ஆகிய இரண்டு படங்களில் ஒரு படத்திற்கு மட்டுமே பாசிடிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. 2014ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படத்தை விட, இந்த படம் நன்றாக இருப்பதாகவும் இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்றும் சில ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

ஜிகர்தண்டா படத்தின் விமர்சனங்களுக்கு அப்படியே நேர்மறையாக உள்ளது, ஜப்பான் படத்தின் விமர்சனம். கார்த்தியின் சினிமா வாழ்க்கையிலேயே அவர் தேர்ந்தெடுத்த மிகவும் மோசனமான படம் இது என ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர். 

எதை குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்? 

ஜிகர்தண்டா மற்றும் ஜப்பான் ஆகிய இரண்டு படங்களில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்குதான் அதிகளவில் பாசிடிவான விமர்சனங்கள் வந்துள்ளன. எனவே, அந்த படத்தை குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் என சில சினிமா விமர்சகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | ‘ஜப்பான்’ படம் எப்படியிருக்கு? ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News