‘ஃபையர்’ என நிரூபித்த அல்லு அர்ஜுன்- ‘புஷ்பா-2’வுக்கு இத்தனை கோடி சம்பளமா?
பிரம்மாண்டமாக எடுக்கப்படவுள்ள புஷ்பா இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுனின் சம்பளம் எவ்வளவு எனும் தகவல் வெளியாகியுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து அண்மையில் வெளியான புஷ்பா, வசூல் ரீதியாகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
பான் - இந்தியா ரிலீஸாக வெளியான இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார். இப்படத்தின் பாடல்கள் பாமரர்கள் முதல் பிரபலங்கள் வரை என பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தன. புஷ்பா முதல் பாகத்துக்குக் கிடைத்த வரவேற்பையடுத்து, இதன் அடுத்த பாகத்தை எடுக்கப் படக்குழு தயாராகிவருகிறது. அண்மையில் வெளியான கே.ஜி.எஃப்- 2 மற்றும் ஆர்.ஆர்.ஆர் ஆகிய தென் இந்தியப் படங்களின் அளவுக்குத் தொழில்நுட்பம் மற்றும் ஆக்ஷன் காட்சிகளைக் கொண்டுவர புஷ்பா- 2 குழு முடிவெடுத்துள்ளதாம்.
மேலும் படிக்க | வானதிகிட்ட தோத்த கடுப்பை லிரிக்ஸ்ல இறக்கிட்டாராம்- ‘பத்தல’ பாட்டை பத்தவைத்த கஸ்தூரி!
முன்பே எழுதப்பட்டிருந்த கதையில் இதற்காக சற்று திருத்தமும் செய்யப்பட்டுள்ளதாம். அந்த வகையில் இப்படத்தின் ஷூட்டிங் வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனின் சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்துக்கு அவருக்கு சுமார் 100 கோடி ரூபாய் வரை வழங்க படக்குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறைந்த பட்ஜெட்டில் உருவான இதன் முதல் பாகம் பல மடங்கு லாபத்தை ஏற்படுத்தித் தந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். அல்லு அர்ஜுனுக்கு இந்த சம்பளம் வழங்கப்படும் பட்சத்தில் அவரது கரியரில் 100 கோடி ரூபாய் வாங்கும் அவரது முதல் படமாக இது அமையும் எனவும் கூறப்படுகிறது.
அல்லு அர்ஜூனுக்கு மட்டுமல்லாது இரண்டாம் பாகத்துக்கான படத்தின் பட்ஜெட்டையும் அதிகரித்துள்ளார்களாம். அந்த வகையில் சுமா 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் உருவாகவுள்ளதாம். அடுத்த ஆண்டில் இப்படத்தை பிரமாண்டமாக ரிலீஸ் செய்யவும் படக்குழு முடிவுசெய்துள்ளதாம்.
மேலும் படிக்க | ‘புஷ்பா- 2’வில் என்ன ஸ்பெஷல்?! - ‘லீக்’ ஆன ‘ஃபையர்’ அப்டேட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR