புதுடெல்லி: பிரபல இந்தி நடிகர் அமீர்கானின் மகன் ஜுனைத் கான் பாலிவுட்டில் நுழைவார் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. யஷ் ராஜ் (Yash Raj banner)  என்ற பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் கீழ் ஜுனைத் அறிமுகமாகவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிக விரைவில், அமீரின் மகன் ஜுனைத் பாலிவுட்டில் நுழைவார் என்ற செய்தியை அடுத்து, தற்போது, சலாம் நமஸ்தே (Salaam Namaste) இயக்குனர் சித்தார்த் மல்ஹோத்ரா (Siddharth Malhotra) இயக்கும் திரைப்படத்தில் ஜுனைத் கான் நடிக்கிறார். அடுத்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் திரைப்படத்தில், பத்திரிகையாளர் வேடத்தில் நடிப்பார் ஜுனைத் கான். 1862 ஆம் ஆண்டில் பிரிஜ்நாத்ஜி மகாராஜ் (Brijnathji Maharaj)  வழக்கில் நடந்த ஒரு உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகும் என்று கூறப்படுகிறது. 


Also Read | #VjChitra: சித்ராவை கொன்றது கணவர் ஹேமந்த்


அமீரின் மகனின் முதல் கதாநாயகி யார்?
ஜுனைத் கானின் அறிமுகப் படத்தில், 'பண்ட்டி அவுர் பாப்லி 2' ('Bunty Aur Babli 2')  என்ற திரைப்படத்தில் திரையுலகில் அறிமுகமாகவுள்ள ஷரபி வாஹ் (Sharabi Wagh) நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அர்ஜுன் ரெட்டி (Arjun Reddy) புகழ் ஷாலினி பாண்டே (Shalini Pandey) நடிப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.  'ஜெயேஷ்பாய் வீரியம்' ('Jayeshbhai Jigar'  திரைப்படம் மூலம் படத்தினால் ஷாலினி பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.  இந்தப் படத்தில் ரன்வீர் சிங் (Ranveer Singh) கதாநாயகனாக நடிக்கிறார். 'ஜெயேஷ்பாய் ஜிகர்' திரைப்படத்தை யஷ் ராஜ் நிறுவனம் தான் தயாரிக்கிறது.



சன்னி தியோலுக்குப் பிறகு, அமீர்கான் (Aamir khan) தனது மகனை பாலிவுட்டில் அறிமுகப்படுத்துகிறார். ஆனால், அமீர் கான் தனது மகனின் சினிமா பிரவேசத்திற்கு எந்தவித உதவியும் செய்யவில்லை.
தனது மகன் ஜுனைத்தின் சினிமா ஆசைக்கு அப்பா அமீர்கான் உதவி செய்யவில்லை என்பது குறித்து பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.   


பாலிவுட்டில் அறிமுகமாக வேண்டும் என்பதற்காக ஜூனைத் (junaid khan) கடுமையாக உழைத்து வருவதாக கூறப்பட்டது. நீராஜ் பாண்டே தயாரிப்பில் மலையாள திரைப்படம் ஒன்றின் இந்தி ரீமேக்கில் ஜுனைத் அறிமுகமாவார் என்று கூறப்பட்டது,  ஆனால் ஜுனைத் ஆடிஷனில் நிராகரிக்கப்பட்டார் என்பது அதிர்ச்சித் தகவலாக இருந்தது. இந்தி திரையுலகின் (Bollywood) மிகப்பெரிய நட்சத்திரத்தின் மகனாக இருந்தபோதிலும், ஜுனைத் எப்படி நிராகரிக்கப்பட்டார் என்று அனைவருக்கும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டது.  


Also Read | இந்த வாரம் மீண்டும் ஆரி அனிதாவுக்கு ஆப்பு! லவ்பெட் கேங் முடிவு!


பாலிவுட் பிரபலங்களின் வாரிசுகள் திரையுலகில் நுழைவது என்பது பெரிய விஷயம் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால், Mr. Perfectionist என்று அழைக்கப்படும் அமீர்கான் (Aamir Khan)  தனது மகனின் திரையுலக பிரவேசத்திற்கு உதவ மறுத்துவிட்டார். முடிந்தால், உன் திறமையால் நீயே முன்னுக்கு வா என்று அசீர்வாதம் மட்டுமே கொடுத்துவிட்டார். 


அமீர்கானின் மகன் ஜுனைத் நாடகங்களிலும் (theater)  நடிக்கிறார். இது தவிர, 'PK' படத்தில் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்திருக்கிறார். ஜுனைத் 'மாஸ்டர் மைண்ட்' ('Mastermind') என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் தோன்றியுள்ளார்.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR