இந்த வாரம் மீண்டும் ஆரி அனிதாவுக்கு ஆப்பு! லவ்பெட் கேங் முடிவு!

பிக் பாஸ் 4 இன் முதல் புரோமோ இன்று வெளியாகியுள்ளது. 

Written by - ZEE Bureau | Last Updated : Dec 10, 2020, 10:31 AM IST
    1. பிக் பாஸ் 4 இன் முதல் புரோமோ வீடியோ வெளியீடு
    2. இந்த வாரம் மோசமாக செயல்பட்டவர்கள் பட்டியல்
    3. இருவரும் சிறை செல்ல வாய்ப்பு
இந்த வாரம் மீண்டும் ஆரி அனிதாவுக்கு ஆப்பு! லவ்பெட் கேங் முடிவு!

பிக் பாஸ் 4 இன் முதல் புரோமோ இன்று வெளியாகியுள்ளது. அதன்படி முதல் புரோமோ வீடியோவில் போட்டியாளர்கள் முன்னோக்கி வருவதையும், ரோபோ பணியில் மோசமாக செயல்பட்ட போட்டியாளர்களை பரிந்துரைப்பதையும் ஒரு பார்வை கொண்டுள்ளது.

இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் (Bigg Boss Tamilஇல் ஆரி மற்றும் அனிதா (Anitha Sampathடார்கெட் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாரமும் சிறப்பாக செயல்பட்டவர்கள் மற்றும் மோசமாக செயல்பட்டவர்கள் என்ற அடிப்படையில் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் அடுத்த கேப்டனுக்கான பட்டியலிலும், சிறைக்கு செல்லும் பட்டியலிலும் தேர்வு செய்யப்படுவது வழக்கம். 

ALSO READ | Big Boss 4: பிக் பாஸ் வீட்டிலிருந்து இதுவரை eviction ஆகாதவர்கள் யார்

அதன்படி, இந்த வாரம் மோசமாக செயல்பட்டவர்கள் பட்டியல் குறித்த நாமினேஷன் நடக்கும்போது ஆரி மற்றும் அனிதாவை ஹவுஸ்மேட்ஸ் தேர்வு செய்துள்ளார்கள். ரியோ (Rio Raj), ஜித்தன் ரமேஷ், ஆஜித், சோம், அர்ச்சனா ஆகியோர் ஆரி (Aari Arjuna), அனிதாவை மோசமான போட்டியாளர்கள் என்று கூறுவதால் அவர்கள் இருவரும் சிறை செல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News